வருடல்

செய்திகள்

சிறீலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞ்ஞன் பலி – வீதியை மறித்து மக்கள் போராட்டம்!

மல்லாகத்தில் நேற்று இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், மரணமான இளைஞன், தேவாலய விழாவில் பங்கேற்ற அப்பாவி என்று, பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், அந்தப் பகுதியில் நேற்று நள்ளிரவுக்குப் பின்னரும் பதற்ற நிலை காணப்பட்டது.

மல்லாகம் சந்திக்கு அருகேயுள்ள சகாயமாதா தேவாலயத்தில் நேற்று மாலை நடந்த விழாவில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டிருந்தனர். அந்தச் சந்தர்ப்பத்தில் வெளியில் இருந்து வந்த சிலர் குழப்பம் விளைவிக்க முற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது, ஆலயப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அதனைத் தடுக்க முற்பட்டனர். அந்த நிலையில் அங்கு வந்த சுன்னாகம் காவல்துறையினர், துப்பாக்கிச் சூடு நடத்தியதில், மல்லாகத்தைச் சேர்ந்த பாக்கியராசா சுதர்சன் (வயது 32) என்ற இளைஞன் மரணமானார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.

மேலும் திருப்பலி நடந்து கொண்டிருந்த சமயம் ஆயுதங்களுடன் ஒரு சிலர் வருகைத்தந்ததாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன், தான் திருப்பலியில் கலந்து கொண்டிருந்தபோது ஒரு சிலர் தன்னை வந்து தாக்கியதாகவும், தனது கையிலும் தலையிலும் வெட்டுக்கள் விழுந்ததாகவும், அதன் பின்னர் பொலிஸார் தாக்குதல் கும்பலை விட்டு விட்டு தம்மை நோக்கியே  துப்பாக்கிச்சூடு நடத்தினர் எனவும் அதில் தனது உறவினன் பலியாகிவிட்டதாகவும் சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவர் குற்றச்செயல்களில் ஈடுபடாத அப்பாவி என்றும், காவல்துறையினர் திட்டமிட்டு துப்பாக்கிச் சூட்டை நடத்தினர் என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி, காங்கேசன்துறை வீதியை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேவேளை, காவல்துறையினரின் துப்பாக்கியை பறிக்க முற்பட்ட போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலேயே குறித்த இளைஞன் பலியானார் என்றும் மற்றொருவர் காயமடைந்தார் என்றும் சிறிலங்கா காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இரவிரவாக வீதியை மறித்துப் பொதுமக்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த நிலையில் பெருந்தொகையான காவல்துறையினர், சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்.

மல்லாகம் நீதிவான் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தியதுடன், சம்பவம் நடந்த போது அங்கிருந்த பொதுமக்களையும் சந்தித்து விபரங்களைக் கேட்டறிந்தார்.

அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களையும் அமைதிப்படுத்தினார்.

விசாரணைகளை அடுத்து துப்பாக்கிச் சூடு நடத்திய சிறிலங்கா காவல்துறை அதிகாரியை கைது செய்யவும் மல்லாகம் நீதிவான் உத்தரவிட்டார்.

எனினும், தமக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று கோரியும், சிறிலங்கா காவல்துறையினரைக் கண்டித்தும் நள்ளிரவுக்குப் பின்னரும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

BBC TAMIL NEWS 25/01/2019

வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
February 2019
M T W T F S S
« Jan    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • ஆலயப் பணியின் போது மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் பலி!
  • ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப் பயணம்!
  • பிரதமர் பேசும் போது மெளனியாக இருந்தது ஏன்…! சிறீதரனின் புது விளக்கம்:
  • மாகாணசபை தேர்தலை நடத்துமாறு உச்ச நீதிமன்றில் மனு:
  • கொக்குவிலில் பெற்றோல் குண்டு வீச்சுத் தாக்குதல்!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்