வருடல்

செய்திகள்

ஜனநாயக அரசியலை முன்னெடுக்க விடுதலைப்புலிகள் தடையாக இருந்ததாக சுமந்திரன் குற்றச்சாட்டு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முன்னர் தமிழ் அரசியல் கட்சிகள் ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடையாக இருந்தனர்.  என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், அவ்வாறான தடையை  மீறி ஜனநாயக அரசியலில் ஈடுபட்டவர்கள் அதனை மீறியமைக்காக படுகொலை செய்யப்பட்டனர் எனவும் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழிலுள்ள அவரது இல்லத்தில் இன்று (29/12/2018) சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அண்மையில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் கே. சயந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலை புலிகளுடனான டீலில் உருவானது என கருத்து தெரிவித்தமை தொடர்பில் கேட்டதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவான போது நான் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கவில்லை. அதனால் எந்தவிதமான டீல் நடந்தது என்றோ , அல்லது டீல் நடந்ததா ? என்பது பற்றி எனக்கு  தனிப்பட்ட அறிவு கிடையாது, ஆனாலும் பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த உண்மை இருக்கின்றது.

அது என்னவெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முன்னர் தமிழ் அரசியல் கட்சிகள் ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடை விதித்திருந்தனர்.

அதனை மீறி ஜனநாயக அரசியலில் ஈடுபட்டவர்கள் அதனை மீறியமைக்காக படுகொலை செய்யப்பட்டனர்.

விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைகளுக்கு வரும் போது அதன் இடைநடுவில் செயற்பட்ட நோர்வே போன்ற நாடுகள் அவர்களுக்கும் ஜனநாயக சக்தி இருப்பது அவசியம் என வலியுறுத்தி இருந்தனர். அவ்வாறு இருந்தாலே சர்வதேச நாடுகளுடன் பேச முடியும், இலங்கை அரசாங்கத்துடன் பேசி சில இணக்க பாடுகளை ஏற்படுத்த முடியும் என்ற ஆலோசனைகளை விடுதலைப்புலிகளுக்கு பல நாடுகள் கொடுத்தன.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கத்தின் போது ஜனநாயக ரீதியில் அரசியலை முன்னெடுத்தவர்களினதும் ,  புலிகளினதும் தேவைப்பாடுகளும் சந்தித்தன. அதனாலேயே  தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு பின்னர் தமிழ் அரசியல் கட்சிகள் அரசியலை முன்னெடுக்க விடுதலைப்புலிகள் இணங்கினார்கள். என அவர் தெரிவித்தார்.

BBC TAMIL NEWS 25/01/2019

tgte-election-2019-london
tgte-election-2019-london
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
September 2019
M T W T F S S
« Apr    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • தேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்!
  • நாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:
  • முகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது !
  • இஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உ
  • யாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்