வருடல்

செய்திகள்

ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதன் பின்னர் காணி விடுவிப்பு தொடர்பில் முடிவாம்: யாழில் பிரதமர்

யாழ்.குடாநாட்டில் படையினர் வசம்முள்ள காணிகளை விடுவிப்பது குறித்து, ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதன் பின்னர் அறிவிப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

இருநாள் பயணமாக யாழ்ப்பாணம் வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ​நேற்றுயாழ்.மாவட்ட செயலகத்தில் முப்படையினர் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்.

இந்த கலந்துரையாடலில் ஊடகங்கள் எவையும் அனுமதிக்கப்படவில்லை. கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தகவல் வெளியிட்ட போதே மேற்படி விடயத்தை கூறியுள்ளனர்.

இது தொடர்பாக மேலும் அவர்கள் கூறுகையில், யாழ்.மாவட்டத்தில் படையினர் வசம் உள்ள மக்களுடைய காணிகள் தொடர்பான தகவல்களை பிரதமர் கேட்டறிந்து கொண்டார். குறிப்பாக வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள காணிகள், மற்றும் மண்டைதீவில் கடற்படையின் வசம் உள்ள காணிகள், மக்கள் குடியிருப்பு பகுதிகளில் உள்ள படைமுகாம்கள் தொடர்பான தகவல்களை தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சமர்பித்திருக்கின்றனர்.

அவற்றை கேட்டறிந்து கொண்ட பிரதமர் கொழும்பு சென்றதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுடன் கலந்துரையாடிய பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைள் குறித்து தெரிவிப்பதாக கூறியுள்ளார். மேலும் பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிப்பது தொடர்பாகவும், பலாலி விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் தொடர்பாகவும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசியுள்ளனர்.

எனினும் பலாலி விமான நிலையத்திற்காக எடுக்கப்பட்டிருக்கும் காணிகள் திருப்பி கொடுக்கப்படமாட்டாது. காரணம் பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரம் உயர்த்துவதற்கு இந்தியா இணங்கியுள்ளதாக பிரதமர் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. எனினும் விமான நிலையத்திற்காக மேலதிக காணிகள் எவையும் எடுக்கப்படக்கூடாது என தமிழ்தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை வடமாகாணத்தில் 5 மாவட்டங்களிலும் நகர்புறங்களில் படையினர் வசம் உள்ள 600 ஏக்கர் காணி விடுவிக்கப்படுவதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை பிரதமர் விடுப்பார் என மீள்குடியேற்ற அமைச்சு வட்டாரங்கள் கூறியிருந்தபோதும் அவ்வாறான அறிவிப்பு எதனையும் பிரதமர் விடுக்கவில்லை.

BBC TAMIL NEWS 21/11/2018

வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
January 2019
M T W T F S S
« Dec    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • விக்னேஸ்வரனை சந்தித்தார் ஆளுனர்- வடக்கு அபிவிருத்தி குறித்து ஆராய்வு!
  • எதிர்க் கட்சித் தலைவரானார் மஹிந்த ராஜபக்‌ஷ!
  • பொங்கல் திருநாளில் வல்வையில் பட்ட பெருவிழா!
  • 1956 இல் மொழி உரிமையை வழங்கியிருந்த நாடு கொடிய யுத்தத்திற்குள் சென்றிருக்காது: கிரியெல்ல
  • யாழ் நகரில் களைகட்டிய பட்டிப் பொங்கல் பெருவிழா!
அதிகமாக பார்க்கப்பட்டவை
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்