வருடல்

செய்திகள்

டெங்கு நோயை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு வட ஆளிநர் பணிப்பு!

டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறும் அதற்காக சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் முழுமையான ஒத்துழைப்பினை கால நேரம் பாராது வழங்க வேண்டுமெனவும் வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே பணிப்புரை விடுத்துள்ளார்.

வடமாகாண ஆளுநர் செயலகத்தில்  நடைபெற்ற டெங்கு நோயின் தாக்கம் மற்றும்  அதனை உடனடியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் கூட்டத்தின்  போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அங்கு கருத்து தெரிவித்த  ஆளுநர்,

டெங்கு நோய் பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு வேண்டிய அனைத்து கோரிக்கைளையும் நிறைவேற்ற தாம் தயாராக இருப்பதாகவும் அதற்காக முழு நேரமும் சம்பந்தப்பட்ட தரப்பினர் செயற்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலதிக தேவைகள் தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடல்களை அவ்வப்போது நடத்தி டெங்கு நோய் பரவாமல் தடுக்கும் பணி விரைவாக முன்னெடுக்கப்படும் என ஆளுநர்  தெரிவித்தார்.

இதேவேளை  இந்தாண்டில் 1344 பேர் டெங்கு நோய்க்கு உள்ளாகி யாழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் அதிலும் குறிப்பாக டிசம்பர் 24 ஆம் திகதி வரையில் 422 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டிருப்பதாகவும் சுகாதார திணைக்களத்தினர் ஆளுநரிடம் தெரிவித்தனர்.

கடந்த 27 ஆம் திகதி முதல் டெங்கு நோய் தடுப்பு விசேட செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாவும் இதன்போது யாழ்ப்பாணம் பசார் வீதியில் 30 இடங்களில் டெங்கு நோய் நுளம்பு பரவக்கூடிய இடங்களை இனங்கண்டு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியில் 10 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். அதேபோன்று நாவாந்துறை பகுதியில் 45 இடங்களை இனங்கண்டிருப்பதாகவும் அவர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் 7 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

இக் கூட்டத்தில் சுகார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் எம்.கேதீஸ்வரன் வடமாகாண உள்ளுராட்சி திணைக்கள ஆணையாளர் பற்றிக்நிறஞ்சன் யாழ் மாநகர ஆணையாளர் ஜெயசீலன் சுகாதார அமைச்சின் செயலர் திவாகரன் ஆளுநரின் செயலர் எல்.இளங்கோவன் மற்றும் டெங்கு நோய் தடுக்கும் விசேட செயலணியை சேர்ந்த பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

BBC TAMIL NEWS 25/01/2019

tgte-election-2019-london
tgte-election-2019-london
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
January 2020
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • தேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்!
  • நாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:
  • முகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது !
  • இஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உ
  • யாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்