வருடல்

செய்திகள்

தந்தையை பழிவாங்க சிறுமியை கொலை செய்த கொடூரம்!

தந்தையை பழிதீர்க்கும் நோக்கிலேயே சிறுமி ரெஜினா கொலை செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிறப்பு பொலிஸ் பிரிவின் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் தெரிவித்துள்ளார். இந்த கொலைக்கு சிறுமியின் சிறிய தந்தை உள்ளிட்ட நால்வர் துணைபோயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுழிபுரம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து நேற்றுமுன்தினம் மாலை ரெஜினா என்ற ஆறு வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள வடக்கு மாகாண சிறப்பு பொலிஸ் பிரிவின் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் –

“சம்பவம் தொடர்பான விசாரணையின் பின் சிறுமியின் சீருடை மறைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தை பிரதான சந்தேகநபர் அடையாளம் காட்டியுள்ளார். இதனையடுத்து பாடசாலைச் சீருடை மீட்கப்பட்டது. எனினும் தோடுகளை மறைத்து வைத்த இடத்தை சந்தேகநபரால் அடையாளம் காட்டமுடியவில்லை. சந்தேகநபர்கள் கஞ்சா போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள்.

சந்தேகநபர்கள் 19 தொடக்கம் 23 வயதுக்குட்பட்டவர்கள். இவர்கள் பனைகளில் ஏறி திருட்டுத்தனமாக கள்ளு இறக்கி குடித்துள்ளனர். இதனை கொலை செய்யப்பட்ட சிறுமியின் தந்தை அறிந்துள்ளார். இதனையடுத்து சந்தேகநபர்களில் இருவரை அடித்து கண்டித்திருந்தார். இந்த சம்பவம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், சிறுமியின் தந்தையை பழிதீர்க்க வேண்டும் என்ற வெறியோடு பிரதான சந்தேகநபர் இருந்துள்ளார். இதற்காக சிறுமி ரெஜினாவை கொலை செய்துள்ளனர். இதற்கு சிறுமியின் சிறிய தந்தையும் உடந்தையாக இருந்துள்ளார். கொலையை திசை திருப்ப தோடுகளை எடுத்ததுடன், சீருடையையும் களைந்துவிட்டு சடலத்தை கிணற்றுக்குள் போட்டுள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.

BBC TAMIL NEWS 25/01/2019

வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
February 2019
M T W T F S S
« Jan    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • ஆலயப் பணியின் போது மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் பலி!
  • ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப் பயணம்!
  • பிரதமர் பேசும் போது மெளனியாக இருந்தது ஏன்…! சிறீதரனின் புது விளக்கம்:
  • மாகாணசபை தேர்தலை நடத்துமாறு உச்ச நீதிமன்றில் மனு:
  • கொக்குவிலில் பெற்றோல் குண்டு வீச்சுத் தாக்குதல்!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்