வருடல்

செய்திகள்

தமிழர் விடுதலைக்கூட்டணி வசமானது வவுனியா நகரசபை!

வவுனியா நகரசபையினை தமிழர் விடுதலைக்கூட்டணி தன்வசப்படுத்தியுள்ளதுடன் தலைவராக இ. கௌதமன் தெரிவு செய்யப்பட்டார்.

வவுனியா நகரசபையின் தலைவர், உப தலைவர் தெரிவு இன்று வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது தலைவருக்கான போட்டியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் நா.சேனாதிராஜாவும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் சார்பில் இராசலிங்கம் கௌதமனும் நிறுத்தப்பட்டு பகிரங்க வாக்களிப்பு இடம்பெற்றது.

இதன்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட 75 வயதான நா. சேனாதிராஜாவுக்கு கூட்டமைப்பின் உறுப்பினர்களான 8 பேரும் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் ஒருவருமாக 9 பேர் வாக்களித்திருந்தனர்.

தமிழர் விடுதலைக்கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட 37 வயதான இ.கௌதமன் தமிழர் விடுதலைக்கூட்டணியின் 3 வாக்குகளும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 3 வாக்குகளும், ஐக்கிய தேசியக்கட்சியின் 3 வாக்குகளும், ஈ.பி.டி.பியின் ஒரு வாக்கும், பொது ஜனபெரமுனவின் ஒருவாக்குமாக 11 வாக்குகள் பெற்று தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

உபதலைவருக்கான தெரிவில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் க. சந்திரகுலசிங்கமும் சுதந்திரக்கட்சியின் சார்பில் சு. குமாரசாமியும் போட்டியிட்டிருந்தனர்.

இவர்களில் க. சந்திரகுலசிங்கத்திற்கு கூட்டமைப்பின் உறுப்பினர்களான 8 பேரும் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் ஒருவருமாக 9 பேர் வாக்களித்திருந்தனர். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட சு. குமாரசாமிக்கு தமிழர் விடுதலைக்கூட்டணியின் 3 வாக்குகளும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 3 வாக்குகளும், ஐக்கிய தேசியக்கட்சியின் 3 வாக்குகளும் ஈ.பி.டி.பியின் ஒரு வாக்கும் பொது ஜனபெரமுனவின் ஒரு வாக்குமாக 11 வாக்குகள் பெற்று உபதலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

இந் நிலையில் அனைத்து தெரிவுகளுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நடு நிலைவகித்திருந்தது.

இதேவேளை, வவுனியா நகரசபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட இ.கௌதமன் முன்னாள் நகரசபை தலைவரான வேலுச் சேமன் எனப்படும் ச.சுப்பிரமணியத்தின் பெறாமகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத் தெரிவுக்கு பார்வையாளர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான எம’.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், கே.கே.மஸ்தான், சிவமோகன், வடமாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், ஜ.ரி.லிங்கநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

BBC TAMIL NEWS 03/04/2018

மாவீரர் நாள் 2017 கிளிநொச்சி

மாவீரர் நாள் 2017 முள்ளியவளை

மாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்

முன்னைய செய்திகள்
April 2018
M T W T F S S
« Mar    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
Twitter Varudal News
  • “மே” முதல் வாரத்தில் இளைஞ்ஞரணி மாநாடு ஒன்றை நடாத்த திட்டமிட்டுள்ள விக்னேஸ்வரன்!
  • இரணைதீவை மீட்க சிவில் சமூக பிரதினிதிகளுடன் படகுகளில் சென்ற மக்கள்…!
  • வவுனியாவில் – சாரதியின் தாக்குதலுக்கு உள்ளான மாணவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!
  • முக்கிய நாடுகளின் உயர்மட்டத் தலைவர்களுடன் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காமல் நாடு திரும்புகிறார் மைத்திரி:
  • யாழில் – முள்ளிவாய்க்கால் நினைவாலயத்திற்கான தடை நீக்கம்!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • “மே” முதல் வாரத்தில் இளைஞ்ஞரணி மாநாடு ஒன்றை நடாத்த திட்டமிட்டுள்ள விக்னேஸ்வரன்!
  • இரணைதீவை மீட்க சிவில் சமூக பிரதினிதிகளுடன் படகுகளில் சென்ற மக்கள்…!
  • வவுனியாவில் – சாரதியின் தாக்குதலுக்கு உள்ளான மாணவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!
  • முக்கிய நாடுகளின் உயர்மட்டத் தலைவர்களுடன் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காமல் நாடு திரும்புகிறார் மைத்திரி:
  • யாழில் – முள்ளிவாய்க்கால் நினைவாலயத்திற்கான தடை நீக்கம்!
  • யாழ்ப்பாணத்தில் உதைபந்தாட்டப் போட்டியின் போது மயங்கி விழுந்த இளைஞன் மரணம்!
  • இன்று முதல்  மீண்டும் இலங்கைக்கு அமெரிக்காவின் ஜீ.எஸ்.பி வரிச் சலுகை!
  • “தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் ஊடகர்களின் பங்கு” நூல் வெளியீடு:
  • நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு உடனடியாக தேர்தலை நடத்த முடியுமா…? சவால் விடும் மகிந்த