வருடல்

செய்திகள்

தமிழ்க் கட்சிகள் கொள்கைக்காக செயற்பட வேண்டும் – சிலரின் முகங்கள் பிடிக்கவில்லை என்பதற்காக ஒதுங்குவது மக்களுக்கு செய்யும் துரோகம்: விக்கி

கட்சிகள் தமது கொள்கைகளில் திடமாக இருக்க வேண்டும்.  குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. எமது கொள்கைகள் மக்களுக்காக இயற்றப்பட்டவை. நாம் அவ்வாறான பொதுக் கொள்கைகளை இயற்றிவிட்டுச் சிலரின் முகங்கள் எமக்குப் பிடிக்கவில்லை என்று ஒதுங்கிச் செல்வது மக்களுக்குத் துரோகம் செய்யும் செயலாக முடியக் கூடும்.

இவ்வாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அவர் ஊடகங்களுக்கு அனுப்பும் வாரத்துக்கொரு கேள்வி பதிலில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  அதில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,

கேள்வி: ஒரு மக்கள் அரசியல் பேரியக்கத்தையும்  ஒத்த கொள்கைகளையுடைய அனைத்துத் தரப்பினரையும் ஒன்றாகச் சேர்த்து, பயணிக்க வேண்டும் என்ற கருத்துகள் வலுவாகக் கூறப்பட்டு வரும் நிலையை இப்போது எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: நாங்கள் யாவரும் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்துகளும் இருக்க முடியாது. கொள்கை ரீதியாக நாம் பயணிக்க விரும்பினால் எம் கட்சிகளின் நலவுரித்து பின் ஆசனத்துக்குப் போகவேண்டிவரும்.

கட்சி நலன்களையும் எமது முன்னைய பின்னணிகளையும் மற்றையவர்களின் முன்னைய பின்னணிகளையும் கணக்கில் எடுத்து பயணிக்கத் தொடங்கினோமானால் எமது ஒற்றுமை குலைந்து விடும்.

ஒரே கொள்கைகள் உடைய சில கட்சிகள் தமது கட்சி நலன்கள் சார்ந்து வேற்றுமைப் படப் பார்க்கின்றன.

.நான் மக்கள் இயக்கம் பற்றி குறிப்பிட்ட கருத்து தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டுள்ளது. அதாவது மக்கள் இயக்கத்துக்கு தலைமை தாங்குவது என்பது அதிகாரம் அற்ற இயக்கத்தின் ஆதங்க வெளிப்பாடாக இருக்கும் என்று கூறியது தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டுள்ளது.

சாத்வீக அடிப்படையிலான மக்கள் இயக்கப் போராட்டங்கள்  நாம் யாருக்கு எதிராக போராடுகின்றோமோ அவர்களின் “மனசாட்சியை ” அசைத்துப்பார்ப்பதன்  ஊடாக வெற்றி பெற எத்தனிப்பவையாகும்.

ஒத்துழையாமை இயங்கங்கள் மூலம் மிகப்பெரும் எண்ணிக்கையிலான மக்கள்  ஆட்சியாளர்களின் அதிகாரத்துக்கு சவால் இடுவதன் மூலம் வெற்றி பெற மேற்கொள்ளப்படுகின்றன. இவை இரண்டுமே சிங்கள அரசியல் தலைவர்களுக்கு எதிராக பெருமளவில் பயன்படுத்தப்பட முடியாதவை என்பதையே வரலாற்றின் மூலம் நாம் பார்க்கின்றோம்.

அவர்கள் மனசாட்சி அசைந்து கொடுக்கப் போவதில்லை.

எமக்கு எதிராக சிங்கள ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட பாகுபாட்டு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் எமக்கான அதிகார பரவலாக்கம் வேண்டியும் நாம் அகிம்சை வழியில் கடந்த காலங்களில் முன்னெடுத்த போராட்டங்கள் சிங்கள ஆட்சியாளர்களின் அதிகாரத்தை ஆட்டம் காணச் செய்யவில்லை. மாறாக நாம் எதிர்பார்த்தவற்றை அடைய முடியாது போனதே வரலாறு. இதற்கு காரணம் எண்ணிக்கை அடிப்படையில் தமிழர்கள் மிகவும் குறைவாக இருப்பதே.

குறைந்த எண்ணிக்கையான மக்கள் சாத்வீக இயக்க போராட்டங்களின் மூலம் சிங்கள ஆட்சியாளர்களின் அதிகாரத்தை அசைக்க முடியாமல் போய்விட்டது.

இன்றைய காலகட்டத்தில் எமது இலக்குகளை அடைவதற்கு அரசியல் மற்றும் ராஜதந்திரப் போராட்டம் எமக்கு மிக அவசியமாக காணப்படுகின்றன.

அதேசமயம்  எமது மக்கள் மத்தியில் நான் முன்னர் குறிப்பிட்டவாறு,  அடக்கு முறைக்கு எதிராகப் போராடும் சிந்தனையை எழுச்சி பெற வைப்பதற்கும், சந்ததிக்குப் பின் சந்ததியாக வெற்றிபெறும்வரை போராட்டத்தை முன்னெடுப்பதற்கும், அரசியல் சமூக பொருளாதார மற்றும் கலாசார ரீதியாக எமது மக்களை வலுப்படுத்துவதற்கும், சிங்கள மக்கள் மத்தியில் எமது போராட்டம் பற்றிய நியாயத்தை, உண்மையை எடுத்துக் கூறுவதற்கும் மக்கள் போராட்டம் மிக மிக அவசியமாகின்றது.

தமிழ் மக்கள் கூட்டணி ஊடாக அரசியல் ராஜதந்திர செயற்பாடுகளை முன்னெடுக்கும் அதேவேளை நான் தொடர்ந்து தமிழ் மக்கள் பேரவை ஊடாக மக்கள் இயக்க போராட்டங்களிலும் ஈடுபடுவேன். நான் எனது உரையில் குறிப்பிட்டபடி பழைய குரோதங்கள் மற்றும் கசப்பான சம்பவங்களைப் புறந்தள்ளி கொள்கை அடிப்படையில் கட்சிகள் ஒன்றுசேர்ந்து செயற்படுவது அவசியம் என்பதே எனது விருப்பம் . என்றார்.

 

BBC TAMIL NEWS 25/01/2019

tgte-election-2019-london
tgte-election-2019-london
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
September 2019
M T W T F S S
« Apr    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • தேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்!
  • நாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:
  • முகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது !
  • இஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உ
  • யாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்