வருடல்

செய்திகள்

திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட சிறைக் கைதிகள் – விசாரணைகளில் அம்பலம்!

வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின் போது 27 கைதிகள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனயவுப் பிரிவினரால் நிறைவு செய்யப்பட்டு, அறிக்கை சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் விசாரணைகளின் போது வெளிபப்டுத்தப்பட்ட சாட்சிகளின் பிரகாரம் சிறையில் இருந்து கலவரத்தின் இடை நடுவே முச்சக்கர வண்டியில் தப்பியோடும் போது பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் 8 பேரும், பொலிஸ் விஷேட அதிரடிப் படை மீது தாக்குதல் நடத்தும் போது பதில் தககுதலில் இருவரும் கொல்லப்ப்ட்டுள்ளதாகவும், கலகம் அடக்கப்பட்ட பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டு எட்டுபேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனயவுப் பிரிவு கொழும்பு மேலதிக நீதிவான் ரங்க திஸாநாயக்கவுக்கு அறிவித்தது.

வெலிக்கடை விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் விஷேட பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கரசிங்ஹ இதனை நீதிவானுக்கு நேற்று அறிவித்தார். இந் நிலையில் சட்ட மா அதிபரின் அலோசனை பிரகாரம் நீதிமன்றில் முன்னிலைபப்டுத்தப்ப்ட்ட இந்த விவகாரத்தில் தொடர்புபட்ட ரீ 56 ரக துப்பாக்கிகள் 156, எம்.எம். ரக ரிவோல்வர்கள் 5 உள்ளிட்ட 161 துப்பாக்கிகளையும் அரச இரசாயன பகுப்பயவுக்கு அனுப்ப நீதிவான் ரங்க திஸாநாயக்க உத்தர்விட்டார்.

நேற்றைய தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் கரசிங்ஹ நீதிவானுக்கு சமர்பித்த மேலதிக விசாரணை அறிக்கையின் பிரகாரம், வெலிக்கடை சிறைச்சாலையில் போதைப் பொருள், கையடக்கத் தொலைபேசி மற்றும் வேறு சட்ட விரோதப் பொருட்களை கைப்பற்றும் நோக்குடன் பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் ஒத்துழைப்புடன் சிறைப்பாதுகாப்பு அதிகாரிகளால் 2012.11.9 ஆம் திகதி விஷேட சோதனை ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.

இதன்போது கைதிகள் குழம்பியுள்ள நிலையில், நாளாந்த நடவடிக்கைகளுக்காக ஆயுதங்கங்களை விநியோகம் செய்யும் சிறை ஆயுத களஞ்சியத்தை அவர்கள் சூறையாடி அதில் இருந்த ஆயுதங்களைக் கொண்டு பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் மீது தாக்குதல்களை நடாத்தியுள்ளனர். நிலைமையானது இதன்போது பெரும் கலவரமாக மாறியுள்ளது. அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போயுள்ளது.

இந் நிலையிலேயே கலகத்தின் இடை நடுவே கைதிகள் தப்பிச் செல்வதை தடுக்க வெலிக்கடை சிறைச்சாலையை பொலிஸ் விஷேட அதிரடிப் படை சுற்றிவளைத்துள்ளது. இதன்போது 2009 நவம்பர் 9 ஆம் திகதி இரவு 12.00 மணியளவில் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடாத்திவிட்டு, சிறை அத்தியட்சரின் உத்தியோகபூர்வ இல்லம் அமைந்துள்ள பகுதியூடாக தப்பிச் செல்ல சிலர் முயன்றுள்ளனர். இதன்போது அதிரடிப் படை நடாத்திய பதில் தாக்குதலில் இருவர் காயமடைந்து அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

இதன்போது முச்சக்கர வண்டியொன்றில் தப்பிச் சென்ற கைதிகள் மீது அதிரடிப் படை நடத்திய துப்பாககிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சாட்சியங்களின் பிரகாரம், இந்த சிறைக் கலவரமானது இராணுவமும் தலையீடு செய்த பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்பின்னர் தெரிவு செய்யப்ப்ட்ட 8 கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

மாலன் எனப்படும் மலிந்த நிலேத்திர பெல்பொல, நிர்மல அத்தபத்து,மொஹமட் விஜேரோஹன, களு துஷார எனப்படும் துஷார சந்தன,அசரப்புலிகே ஜோதிபால,ஹர்ஷ சி.மணிகீர்த்தி பெரேரா, சுசந்த பெரேரா, கொண்ட அமில எனப்படும் மலித் சமீர பெரேரா ஆகிய எட்டுபேருமே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக சாட்சிகள் உள்ளன.

சிறைக் கலவரம் அடக்கப்பட்ட பின்னர் அங்கு சிறைக்கு வந்ததாக கூறப்படும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பணியகத்தின் பொலிஸ் பரிசோதகர் ரங்கஜீவ மற்றும் மேலும் இருவர் இந்த கைதிகளை தெரிவு செய்ததாக சாட்சிகள் உள்ளன. என குற்றப் புலனாய்வுப் பிரிவு மன்றுக்கு சமர்பித்த அறிக்கையில் சுட்டிக்கடடப்பட்டுள்ளது.

இந் நிலையிலேயே சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை மன்றில் சமர்பிக்கப்பட்ட ஆயுதங்களை அரச இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்த உத்தரவிட்ட நீதிவான் ரங்க திஸாநாயக்க, இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை எதிர்வரும் மே மாதம் மீள விசாரணைக்கு எடுக்க உத்தரவிட்டார்.

 

BBC TAMIL NEWS 25/01/2019

tgte-election-2019-london
tgte-election-2019-london
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
September 2019
M T W T F S S
« Apr    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • தேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்!
  • நாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:
  • முகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது !
  • இஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உ
  • யாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்