வருடல்

கட்டுரை

நவதாராளவாத உலகமயமாக்கல் யுகத்தில் சர்வதேசவாதமும், தேசியவாதமும் – இ.சோபிதன்

“சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு” (Anti International Terrorism) என்ற கோட்பாடுதான் இன்றைய சர்வதேச சட்டங்கள் அனைத்திற்குமான தாய். உள்நாடுகளில் ஏதோ ஒருவகையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்பது பல்வேறு பெயர்களில் உண்டு. 2001 செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்க அரசின் இருதயமாக விளங்கிய வர்த்தகநிலைய இரட்டைக் கோபுரங்கள் மீது பின்லேடன் தலைமையிலான அல்கொய்தா அமைப்பினர் விமானத்தால் மோதி தாக்குதல் நடத்தியதன் மூலம் இரட்டைக் கோபுரங்கள் நிர்மூலமாய் போயின.

இதைத் தொடர்ந்து உலக ஒழுங்கு மாறினாற்போல் உலக ஒழுங்கை அல்லது சர்வதேச ஒழுங்கை நிர்ணயிக்கவல்ல “சர்வதேச பயங்கரவாத எதிர்ப்புக் கோட்பாட்டை” அமெரிக்கா முன்வைத்து அதனடிப்படையில் ஐநா-வில் சட்டம் உருவானது. அதனைப் பின்பற்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் அதற்குப் பொருத்தமான சட்ட நடைமுறைகள் உருவாகின.

இதன் மூலம் சர்வதேச ஒழுங்கிற்கான தாய்ச் சட்டமாக சர்வதேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் வடிவம் பெற்றது. இது வெறும் சட்டமாக மட்டுமன்றி புலனாய்வுத்துறை, போலீஸ் – இராணுவம் மற்றும் அரச நிறுவனங்கள் என்பன அனைத்தையும் தழுவிய உலகளாவிய சட்ட நடைமுறையாக மாறியது. குடிவரவு, குடிஅகல்வு என்பனவும், போக்குவரத்து மற்றும் உள்நாட்டு – வெளிநாட்டு பிரயாணங்கள், குறிப்பாக கப்பல் – விமான போக்குவரத்து என்பனவெல்லாம் பெரிதும் இதன் அடிப்படையிலான நடைமுறைக்கு உள்ளாயின.

சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு என்பது முழுஅளவிலான ஒரு தகவல் யுத்தமாக வடிவம் பெற்று அது உலகளாவிய மக்களின் மனப்பாங்கை உளவியலை நிர்ணயிக்கவல்ல ஓர் எண்ணக்கிடக்கையாய் மாறியது. இதன் மூலம் சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு என்பது உலகளாவிய மக்களின் உளவியலாயும், ஒருவகை பண்பாட்டு பதமாயும் மாற்றப்பட்டது. இங்கு பண்பாடு என்பது ஆழமான அர்த்தத்தில் பயன்படுத்தப்படும் ஒரு பதமாகும். அதாவது சர்வதேச பயங்கரவாதம் என்பது மக்களின் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனப்பாங்காக மாற்றப்பட்டு ஆயுதம் தாங்கிய செயல்கள் அனைத்தும் வெறுப்புக்குரிய, தண்டனைக்குரிய குற்றமாகவும் ஒரு பண்பாட்டு வடிவத்தைப் பெற்றது. இது ஒருவகை தீண்டாமைக் கோட்பாடாக உருவானது.

உலகளாவிய ஒழுங்கை நிர்ணயிக்கும், நாடுகளுக்குகிடையேயான உறவை நிர்ணயிக்கும் ஒரு சர்வதேச சட்ட ஒழுங்காக இது ஆக்கப்பட்டதன் பின்னணியில் சர்வதேச அரசியலையும், தேசிய அரசியலையும் புரிந்துகொள்வதற்கான அடிப்படை உண்டு.
பின்லேடனால் தாக்கி அழிக்கப்பட்டது அமெரிக்க அரசின் சர்வதே வர்த்தக நிலையம். உண்மையில் இது அமெரிக்காவின் வர்த்தக நிலையமாக மட்டுமன்றி உலகளாவிய வர்த்தகத்தின் மையமாகவும் உண்டு. இந்தவகையில் உலக ஒழுங்கு என்பது வர்த்தக ஒழுங்கு என்பதும், உலக அரசியல் என்பது வர்த்தகத்திற்கான அரசியல் என்பதும் வெளிப்படையானது.

பண்ட உற்பத்தி வர்த்தகத்தில் தங்கியுள்ளது. ஆகையினால் உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களும், வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களும் வர்த்தக ஒழுங்கிற்கு கீழ்பட்டவை. இன்று உலகளாவிய பண்ட வர்த்தகத்திற்கான உற்பத்தியில் ஈடுபடும் பெருநிறுவனங்களும் அவ்வாறு வர்த்தகத்தில் ஈடுபடும் பெறுநிறுவனங்களும் என இந்த இருவகை நிறுவனங்களுமே உலக அரசியலின் இறைமை வாய்ந்த சக்திகளாகும். தேசங்களின் இறைமையைப் பற்றி பேசியதற்குப் பதிலாக இறைமை பெருநிறுவனங்களினால் நிர்ணயிக்கப்படுகிறது என்பதைப் பற்றி பேசவேண்டிய யுகமாக நவதாராளவாத (Neo Liberalism) உலக அரசியல் காணப்படுகிறது.

இந்த நவதாராளவாத கொள்கையின் அடிப்படையில் அரசியல் – வர்த்தகம் – நிதிமூலதனம் – தகவல்மயம் – அழகியல் – கலை இலக்கியம் – சிந்தனைமுறை – வாழ்க்கைமுறை – உணவு பழக்க வழக்கங்கள் – மூலவள விநியோகம், போன்ற அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு கொள்கையும் நடைமுறையுமாக உலகமயாக்கல் (Globalization) என்பது காணப்படுகிறது.

வாழ்க்கையின் நிர்ணயகரமான காரணி பொருளாதார தளம் என்ற வகையில் நவதாராளவாத பொருளாதார தளத்தின் கீழ் மனிதன் சுவாசிப்பது தொடக்கம் புதைகுழிக்குப் போவது வரை அனைத்தும் ஒரு மையப்புள்ளியில் இணைக்கப்படுவதற்குப் பெயராக உலகமயமாக்கல் என்பது காணப்படுகிறது. இது அனைத்துவகை சுயங்களையும் மறுக்கிறது. “தேசியவாதம்” என்பது சுயத்தின் ஒரு பெரும் புள்ளியாகும். வர்த்தகமய நிதி மூலதன ஆதிக்க உலக ஒழுங்கு என்பது “E-Regions” எனப்படும் தகவல் தொழில்நுட்ப ஆதிக்கத்தையும் மற்றும் கலப்பின பண்ட உற்பத்தி ஆதிக்கத்தையும் கையில் எடுத்திருப்பதன் மூலம் பெருநிறுவனங்களின் கைக்கு உட்பட்ட உலகமாக இந்த உலகமயமாக்கல் அரங்கேறுகிறது. அனைத்து உற்பத்தியும், விநியோகமும், சேவையும் நிறுவனங்களின் கைக்குரியது என்பதே நவதாராளவாத்தின் கோட்பாடாகும்.

இது அனைத்துவகையான அரச உடைமைகளையும், பொது நிறுவனங்களையும், கூட்டுறவு நிறுவனங்களையும் நிராகரித்து பூமியில் விரல்விட்டு எண்ணத்தக்க பெரும் தனவந்தர்களின் கையில் இந்த பூமியையும், உயிரினங்களையும், இயற்கையும், உலகளாவிய மக்களையும் தாரைவார்த்துக் கொடுக்கும் ஒரு கொள்கையாக அமைந்துள்ளது.

எதனை உடுப்பது, எதனை உண்பது, எப்படி சிந்திப்பது, எப்படி பழகுவது, எப்படி வாழ்வது என்பதெல்லாம் பெருநிறுவனங்களால் நிர்ணயிக்கப்பட்டு பெருநிறுவனங்களின் நலன்களுக்காக இந்த முழு உலகமுமே சுழலும் ஒரு கொள்கைப் போக்கே இந்த உலகமயமாக்கல் என்பதாகும். இதன் அடிப்படையில் சர்வதேச வாதத்தையும், தேசியவாதத்தையும் தொகுத்தும் பகுத்தும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

அரசுகளைவிடவும் நிறுவனங்கள் முதன்மை பெற்றுவிட்ட யுகமிது. நிறுவனங்களின் விருப்பங்களினாலும், தேவைகளினாலும் அரசுகள் நிர்ணயிக்கப்படும் யுகமிது. அனைத்துவிதமான உற்பத்திக்கும், விநியோகத்திற்கும் ஆயுதப்படை அவசியம். ஆயுதந்தாங்கிய போலீஸ் – இராணுவம் – புலனாய்வுத்துறையினர் இதில் அடங்குவர். ஆதலால் நிறுவனங்கள் அரசை நிர்ணயிப்பதன் மூலம் மேற்படி ஆயுதந்தாங்கிய படையினரை தம் விருப்பத்திற்குரியவர்களாக ஆக்கி அதன் மூலம் தம் நலன்களை அடைகின்றனர்.

சோசலிச அரசுகள் அல்லது கம்யூனிச கொள்கை கொண்ட அரசுகள் என புவியில் அரசுகள் காணப்பட்ட போதிலும் அவை நிறுவனமய அரசியலுக்கு உட்பட்டுவிட்டன. உலகளாவிய வர்த்தக நிறுவன அரசியல் பொருளாதாரத்திற்குப் பொருத்தமாக சீன அரசு பெருநிறுவனங்களை தோற்றுவித்து அது நிறுவனங்களின் அரசாக வடிவம் பெற்றுள்ளமை ஒரு சிறந்த உதாரணமாக இங்கு விளங்குகிறது. உலக ஒழுங்கு, வர்த்தக ஒழுங்கு என்ற அடிப்படையில் உலக வர்த்தகத்தில் ஈடுபடவல்ல நிறுவன அரசியலுக்கு சீனா தன்னை இசைவாக்கம் செய்து கொண்டதன் விளைவே அங்கு தோன்றிய பெருநிறுவனங்களின் உற்பத்தியும், வர்த்தமுமாகும்.
சர்வதேச பங்கரவாத எதிர்ப்புச் சட்டம், உள்நாட்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், கடல் கப்பல் போக்குவரத்து பாதுகாப்புச் சட்டம்

குறிப்பாக கடற்கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பதற்கான சட்டம், விமான போக்குவரத்து பாதுகாப்புச் சட்டம் மற்றும் பெருநிறுவன அல்லது கம்பெனி சட்டங்கள் என சர்வதேச ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த சட்டங்கள் அமைந்துள்ளன. இவை அனைத்தும் வர்த்தம்சார் அடிப்படையிலான சட்டங்கள் என்பது கவனத்திற்குரியது. இந்தவகையில்தான் உலக அரசியல் வர்த்தக சட்ட அரசியலாக வடிவம் பெற்றுள்ளது. இதில் முதலாளித்துவ நாடுகள் என்றும், சோசலிச நாடுகள் என்றும் மன்னராட்சி நாடுகள் என்றும், ஜனநாயக நாடுகள் என்றும் வேறுபாடுகள் கிடையாது. அனைத்து அரசுகளும் இத்தகைய வர்த்தக நிறுவன ஆதிக்கத்திற்கு உட்பட்ட அல்லது அத்தகைய கொள்கையைக் கொண்ட அரசுகளேயாகும்.

18ஆம் நூற்றாண்டின் இறுதியில் தேசியவாதம் முழுவடிவம் பெற்ற போது அது சுதேச மொழி, சுதேச பண்பாடு என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட சுதேச முதலாளித்துவ கொள்கையுடன் வடிவம் பெற்றது. ஆனால் முதலாளித்துவம் சுதேச எல்லைகளைக் கடந்து ஏகாதிபத்தியமாக வடிவம் பெற்றபோது அது சுதேச மொழி, சுதேச பண்பாடு என்பனவற்றைக் கடந்து முதலாளித்துவ ஏகாதிபத்தியமாக பரிணாமம் அடைந்தது. அதாவது சுதேச மொழியைப் பற்றிப் பேசிய தேசிய முதலாளிகள் தமது சந்தை தேவைக்காக அந்நிய மொழிகளில் பண்டவிற்பனைக்கான முத்திரைகளைப் பதிக்கத் தொடங்கினர்.

அவ்வாறே அந்நிய மொழிகளில் விளம்பரங்களையும் செய்தனர். இதன்மூலம் தேசிய நலனைக் கடந்த ஏகாதிபத்திய நலனுக்குப் பொருத்தமானதாக அந்நிய மொழிகளின் மீது அவர்கள் அக்கறை செலுத்தினர். இது அந்நிய மொழிகள் மீது ஏற்பட்ட அல்லது அயல் மொழிகள் மீது ஏற்பட்ட காதல் கிடையாது. பண்டவர்த்தகத்தில் ஏற்பட்ட காதலின் வெளிப்பாடாகும். அதாவது பண்டங்களை அந்நிய மக்களிடம் சந்தைப்படுத்துவதற்கான ஓர் உத்தியாய் அமைந்தது. இதில் தேசியம் கரைந்த ஒரு சர்வதேச பரிமாணம் இருப்பதைக் காணலாம். இது ஓர் இயங்கியல் வளர்ச்சிப் போக்காகும். ஆனால் இதில் உள்ள அடுத்தகட்ட அம்சம் என்னவெனில் தனது வர்த்தக மற்றும் பொருளாதார ஏகபோகத்திற்காக அனைத்துவகை சுதேசியங்களையும் இது கபளீகரம் செய்யும் ஆபத்தைக் கொண்டதாயும் அமைந்தது. இங்கு காணப்படுகின்ற இத்தகைய இரட்டை வளர்ச்சி நிலையை சரிவர புரிந்து கொள்ளாமல் தேசியவாதம், சர்வதேசவாதம் பற்றிய எல்லைக் கோடுகளை வரையறை செய்யமுடியாது.

வடதுருவமும், தென்துருவமும் துருவம் கடந்த நல்லுறவு கொள்வதை நாகரீக வளர்ச்சி என்று அழைப்பதில் தவறில்லை. நாடுகள் கடந்து, கண்டங்கள் கடந்து, துருவங்கள் கடந்து ஒரு மனிதநேய ஐக்கியம் உருவாகுவதை வரலாற்றின் உன்னதமான வளர்ச்சி என்று அழைக்கமுடியும். இது ஒரு பரஸ்பர தன்மையில் ஒத்திசைவான வகையில் வடதுருவத்திற்கும், தென்துருவத்திற்கும் இடையேயான மக்களின் அந்நியோன்னியமான வாழ்வில் பரஸ்பர பங்களிப்புடன் இயற்கைக்குப் பொருத்தமான வகையில் சங்கமுமாகும் போது அங்கு மனிதகுல உன்னதம் தோன்றுகிறது.

ஆனால் நவதாராளவாத பொருளாதார கொள்கையின் கீழ் அதன் அடிப்படையிலான உலகமயமாக்கலின் கீழ் பெருச்சாளிகள் கொழுக்கவும், அப்பாவி மக்கள் அவர்களுக்கு இரையாகவும் பொருத்தமான வகையிலான உலகமயமாக்கலை அரசியல் பொருளாதார பண்பாட்டு அடிப்படையில் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமுடியாது. இந்த வகையில் அத்தகைய உலகளாவிய அப்பாவி மக்களின் ஆயுதமாக காணப்படுவது அவர்களுக்கான சுயத்தை பாதுகாக்கவல்ல, சுயத்துடன் கூடிய உலகளாவிய நலனை பாதுகாக்கவல்ல தேசியவாதமாகும். இங்கு தேசியவாதம் என்பது அந்த மக்களின் ஐக்கியத்தின் சின்னமாகவும், ஒன்றுதிரண்ட பலத்தின் குறியீடாகவும் அமைகிறது.

ஆதலால் அத்தகைய தேசியவாதம் என்பது மேற்படி பெருநிறுவன ஆதிக்கங்களை எதிர்க்கவல்ல தமது நலனுக்கான இயற்கை சார்ந்த இயல்பு வாழ்வை நிர்ணயிக்கவல்ல மொழி, பண்பாடு, இயற்கைவளம், மூலவளம், சுற்றுச்சுழல் என்பனவற்றை பாதுகாக்கவல்ல மற்றும் பரந்த மக்களுக்கான பொது வினியோகங்களையும், பங்கீட்டையும், சமவாய்ப்புக்களையும் வழங்கவல்ல “தேசியவாதம்”

தவிர்க்கமுடியாத வகையில் அத்தியாவசியமாகிறது. தேசியவாதம் இல்லாமல் மக்களை ஒருதிரண்ட சக்தியாக்க முடியாது. மக்கள் ஒரு திரண்ட சக்தியாக வடிவம் பெறாமல் அவர்களால் தம்மை பாதுகாக்க முடியாது. மக்களின் வாழ்வு என்பது அவர்களினது இயற்கை மூலவளங்களோடும், மொழி – பண்பாட்டோடும், சமவாய்ப்புக்களோடும், சமூக சமத்துவத்தோடும் ஒருங்கிணைந்த அம்சமாய் காணப்படுகிறது. இதற்கு தேசியவாதம் ஒரு கருவியாகும்.

இதற்குப் பொருத்தமாக அண்டைநாட்டு உறவுகளையும், அயல்நாட்டு உறவுகளையும் பேணவல்ல ஓர் உலகளாவிய கொள்கையின் கீழ் தேசியவாதமும், சர்வதேசியவாதமும் ஒரு சீரான வகையில் இணைக்கப்பட வேண்டும்.

– இ.சோபிதன் –

BBC TAMIL NEWS 03/04/2018

மாவீரர் நாள் 2017 கிளிநொச்சி

மாவீரர் நாள் 2017 முள்ளியவளை

மாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்

முன்னைய செய்திகள்
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்:
Thanikasalam140vnad.jpg.pagespeed.ic.GtNcT-hvj2
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
Twitter Varudal News
  • தேசியத் தலைவரால் பெற்றெடுக்க முடியாததை எந்த தமிழ் தலைமைகளாலும் பெறமுடியாது: கிருஸ்ணபிள்ளை!
  • தமிழர்கள் என்றும் போராட்டத்தை கைவிடக்கூடாது – தேரர் முகநூல் ஊடாக தெரிவிப்பு!
  • மாகாணசபைகளின் எதிர்காலம் குறித்து இன்று ஜனாதிபதி தலைமைமையில் ஆராய்வு!
  • இந்திய இராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்களுக்கு யாழில் அஞ்சலி!
  • அனந்தி  தலைமையில் “ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம்” எனும் புதிய கட்சி உதயம்!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை