வருடல்

செய்திகள்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் “மாமனிதர்” சிவராம் அவர்களின் 14ம் ஆண்டு நினைவு நிகழ்வு:

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், மாமனிதருமான தர்மரட்ணம் சிவராம் (தராகி) அவர்களின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும், படுகொலை செய்யப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் நீதி கோரும் போராட்டமும், மட்டக்களப்பில் நேற்று (28) இடம்பெற்றன.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி, வடக்கு, கிழக்கு ஊடகவியலாளர் அமைப்புகள் இணைந்து, நேற்றுக்காலை மட்டக்களப்பு நகரில், கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தின.

இந்தப் பேரணியில், பங்கேற்ற ஊடகவியலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகர முதல்வர் உள்ளிட்ட பலரும், படுகொலை செய்யப்பட்ட 41 ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.

இந்தப் போராட்டத்தின் போது, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரும் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.

அதேவேளை, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தர்மரட்ணம் சிவராம் (தராகி) அவர்களின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பு நகரில் உள்ள மறைக்கல்வி நிலையத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மறைந்த ஊடகவியலாளர் சிவராமுக்கு அஞ்சலி செலுத்தினர்.

BBC TAMIL NEWS 25/01/2019

tgte-election-2019-london
tgte-election-2019-london
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
July 2019
M T W T F S S
« Apr    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • தேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்!
  • நாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:
  • முகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது !
  • இஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உ
  • யாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்