வருடல்

செய்திகள்

பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மண்ணித்தலை_சிவன்_ஆலயம்!

மண்ணித்தலை_சிவன்_ஆலயம்

இவ்வாலயம் சங்குப்பிட்டி பூநகரி வீதியில் ஆரடிச் சந்தியில் இருந்து ஏறத்தாழ 7 கிலோ மீற்றர் தொலைவில் ஒடுங்கிய மணற் பிரதேசத்தில் அமைந்துள்ளது.

வட இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆலயங்களுள் ஓரளவு ஆலயத்தின் கலைமரபை அறியக்கூடிய பழைய ஆலயமாக இதைக் கருதலாம். கோறல்கல், செங்கல் சுதை என்பன கொண்டு அமைக்கப்பட்ட இவ்வாலயம் 21 அடி நீளத்தையும் 12.5 அடி அகலத்தையும், மூன்று தளங்களைக் கொண்ட 7 அடி உயரமான விமானத்தையும் கொண்ட சிறிய ஆலயமாகும்.

இதன் தேவகோஸ்டங்கள், கர்ணக் கூடுகள், குதம், சாலை, பஞ்சரம் என்பன அப்படியே முற்பட்ட சோழக்கலை மரபை ஒத்தாக உள்ளன. இலங்கைத் #தொல்லியல் திணைக்களம் இவ்வாலயத்தை தேசிய மரபுரிமைச் சின்னமாக பிரகடனப்படுத்தி தற்போது பாதுகாத்து வருகின்றது.

ஏறத்தாள இரண்டு கிலோ மீற்றர் அகலமுடைய இந் நிலப்பரப்பில் அமைந்துள்ள இவ் ஆலயத்திற்குத் தெற்காகப் பெருங்கடலும், வடக்கில் யாழ்ப்பாணத்துடன் இலகுவாகப் போக்குவரத்து செய்யக் கூடிய 5கிலோ மீற்றர் அகலமுடைய பரவைக் கடலும் காணப்படுகிறது.

ஆனையிறவு தரைவழிப் பாதை திறப்பதற்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்கும் இடையிலான தரைவழிப் பாதையாக இவ்வாலையம் அமைந்த பிராந்தியம் விளங்கியதை #கோகில_சந்தோசய என்ற #சிங்கள இலக்கியத்தில் வரும் செய்திகள் உறுதி செய்கின்றன. இதன் காரணமாகத்தான் யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்ரைக் கிராமம் ஒன்று #கொழும்புத்துறை என்ற பெயர் பெற்றது.

போத்துக்கேயர் யாழ்ப்பாணத்தின் மீதான படையெடுப்பின் போது அவ்வரசுகால் அரண் ஒன்றைக் கொழும்புத் துறையில் கண்டதாக கூறியிருப்பது இப் பிரதேசத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றது.

(உசாத்துணை நூல்- கிளிநொச்சி மாவட்ட தொன்மையின்_மூலங்கள்)

BBC TAMIL NEWS 25/01/2019

tgte-election-2019-london
tgte-election-2019-london
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
December 2019
M T W T F S S
« Apr    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • தேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்!
  • நாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:
  • முகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது !
  • இஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உ
  • யாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்