வருடல்

செய்திகள்

பொட்டு அம்மான் இல்லை என்றே நம்புகிறோம் – சந்தேகத்தோடு பதிலளித்த சரத் பொன்சேகா!

இறுதிப் போரின்போது பொட்டு அம்மான், சூசை உள்ளிட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர் முன்னாள் இராணுவ தளபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பொட்டு அம்மான் நோர்வேயில் உயிருடன் இருக்கின்றார் என தெரிவிக்கப்படும் கருத்தில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“2009 மே மாதம் 19ஆம் திகதி நந்திக்கடல் பகுதியில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. பிரபாகரன், சூசை உள்ளிட்ட தலைவர்களின் சடலங்கள் அங்கிருந்தே மீட்கப்பட்டன. எனினும், பொட்டு அம்மானின் சடலம் அங்கிருந்து மீட்கப்படவில்லை. அவரின் மனைவியின் சடலமே அங்கிருந்து மீட்கப்பட்டது.

மே 19ஆம் திகதி காலை நத்திக்கடலில் கிழக்கு பகுதியில் பிரபாகரனின் மகன் சார்ள்ஸின் படையணியுடனேயே மோதல் இடம்பெற்றது. வடக்கு கடற்கரைக்கு சென்று ஐந்து பேருடன் தப்பிச் செல்வதற்கு பிரபாகரன் முயற்சித்தார். அங்கு பொட்டுஅம்மானும் இருந்துள்ளார்.

இந்த நேரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பொட்டு அம்மான் தற்கொலை குண்டை வெடிக்க வைத்து இறந்துள்ளார். இந்த தகவலை கே.பி. வெளியிட்டார்.

போரின் இறுதிக்கட்டத்தில் பிரபாகரனுடனேயே பொட்டு அம்மான் இருந்தார். அவர் நோர்வேக்கு தப்பி ஓடவில்லை. அவர் உயிரிழந்து விட்டார் என நம்புகின்றோம்.

யுத்தம் இடம்பெற்ற கால்பகுதியில் கருணாவை இராணுவப் பாதுகாப்புடன் கொழும்பில் தங்கவைத்திருந்தோம். போர் முடிவடைந்த பின்னர் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை அடையாளம் காட்டுவதற்காகவே அவரை நந்திக்கடல் பகுதிக்கு அழைத்துச் சென்றோம்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

BBC TAMIL NEWS 25/01/2019

tgte-election-2019-london
tgte-election-2019-london
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
May 2019
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • தேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்!
  • நாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:
  • முகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது !
  • இஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உ
  • யாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்