வருடல்

செய்திகள்

மஹிந்தவை கூண்டில் ஏற்றி தண்டிக்க தடையாக இருப்பது மைத்திரியே: சரத் பொன்சேகா

கடந்த அரசாங்கத்தில் பாரிய மோசடிகளில் ஈடுப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தடையாக உள்ளார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்தீரமற்ற நிலைமைக்கு நாட்டு தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதியே பொறுப்பு கூற வேண்டும். தேசிய அரசாங்கம் 2015ஆம் ஆண்டு முன்வைத்த வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு இல்லாவிடின் தேசிய அரசாங்கம் 2020ஆம் ஆண்டு பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.

தேசிய அரசாங்கத்தில் இடம்பெற்ற 10 பில்லியன் பினைமுறி மோசடியினை வைத்துக் கொண்டு கடந்த காலத்தில் இடம்பெற்ற பல ஊழல் மோடிகளை எதிரணியினர் மூடி மறைக்கின்றனர். கடந்த மூன்று வருட காலமாக தேசிய அரசாங்கத்தில் பல குறைப்பாடுகள் காணப்படுகின்றது. அரசாங்கமும் குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தார் தேசிய நிதியினை பல வழிமுறைகளில் மோசடி செய்தனர். இதற்கான ஆதாரங்களும் சட்டப்பூர்வமாக உறுதியாக்கப்பட்டுள்ளது. நாட்டில் பொது சாதாரண சட்டங்கள் அனைவருக்கும் பொதுவானதாகவே காணப்பட வேண்டும்.ஆனால் முன்னாள் மஹிந்த மற்றும் அவரது குடும்பத்தாரின் விவகாரத்திலும் சட்டம் தொடர்ந்தும் மந்மகரமாகவே செயற்பட்டு வருகின்றது. ஆனால் இவர்களுக்கு எதிராக அனைத்து சாட்சியங்களும் உறுதியாகவே காணப்படுகின்றது.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமைத்துவத்தில் உள்ள தேசிய அரசாங்கம் தற்போது காணப்படுகின்ற குறைப்பாடுகளை 2020ஆம் ஆண்டுக்குள் விரைவாக நிவர்த்தி செய்ய வேண்டும் அவ்வாறு இல்லாவிடின் மீண்டும் குடும்ப ஆட்சி தோற்றம் பெறும். பாராளுமன்ற தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமரானால் 18ஆவது அரசியல் திருத்தத்தினை தனக்கு சாதகமாக கொண்டுவந்நதை போன்று 19ஆவது அரசியல் திருத்தத்தினை இரத்து செய்து தமக்கு சாதகமான முறையில் புதிய அரசியல் திருத்தத்தினை ஏற்படுத்தி மீண்டும் ஜனாதிபதியாகி விடுவார்.

மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் நாடு பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். தற்போது சுயாதீனமாக செயற்படும் ஆனைக்குழுக்கள் தமது சுயாதீனமற்றுபோய் குடும்ப ஆட்சிக்கு உட்படுத்தப்படும். அதன் பின்னர் தொடர்ச்சியான அரசியல் பழிவாங்கள்கள் மாத்திரமே இடம்பெறும் என்பது மாத்திரம் நிச்சயிக்கப்பட்ட பலரது எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது.

தற்போது நாட்டில் காணப்படுகின்ற ஜனநாயகம் மீண்டும் இருண்ட யுகத்திற்கு செல்லாமல் இருக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக முன்வைத்த வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும். கடந்த காலத்தின் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்கும் விடயத்தில் அரசாங்கம் தொடர்ந்தும் காலதாமதத்தினை ஏற்படுத்துமாயின் அது தேசிய அரசாங்கத்திற்கு மறுமுனையில் பாதிப்பினை ஏற்படுத்தும். நாட்டு மக்களும் தற்போதைய அரசியல் குறைப்பாடுகளை காரணம்காட்டி தீர்மானங்களை மேற்கொள்ளாமல் எதிர்கால நலன் மற்றும் கடந்த கால அரசியல் நிலவரங்களை அடிப்படையாகக் கொண்டு அரசியல தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

BBC TAMIL NEWS 03/04/2018

மாவீரர் நாள் 2017 கிளிநொச்சி

மாவீரர் நாள் 2017 முள்ளியவளை

மாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்

முன்னைய செய்திகள்
September 2018
M T W T F S S
« Aug    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்:
Thanikasalam140vnad.jpg.pagespeed.ic.GtNcT-hvj2
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
Twitter Varudal News
  • மூத்த தளபதி லெப்.கேணல் றாஜன் உட்பட்ட 9 மாவீரர்களின் 26ம் ஆண்டு நினைவு இன்று.
  • முல்லை நிலங்களும் கடல் வளங்களும் மீட்புப் போராட்டத்திற்கு அனைவரையும் கலந்து கொள்ள வருமாறு  மாவை சேனாதிராஜா அழைப்பு!
  • எதிர்கால தலைமைத்துவம் –  வெள்ளியன்று முடிவை வெளியிடுவார் விக்கி!
  • யாழில் மற்றுமோர் விபத்து – 27 வயது இளைஞ்ஞன் பலி!
  • மயிலிட்டி மீன்பிடித் துறைமுக மீள்கட்டுமானத் திட்டம் அடுத்தவாரம் ஆரம்பமாம்!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை