செய்திகள்
மீள் குடியேறாததால் பறிபோகும் நிலையில் ஒதியமலை கிராமம்!
யுத்தம்காரணமாக பல்வேறு கொடூரங்களுக்கு முகம்கொடுத்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட எல்லையில் அமைந்துள்ள ஒதியமலை கிராமத்தை விட்டு வெளியேறி பல்வேறு பகுதிகளில் குடியமர்ந்துள்ள ஒதியமலையை பூர்வீகமாக கொண்ட மக்கள் தமது கிராமத்தில் மீண்டும் குடியேறி எல்லைக் கிராமமான ஒதியமலையை பாதுகாக்க வேண்டும் என்று வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒதியமலைகிராமத்தில் 34 வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் படுகொலைசெய்யப்பட்ட 32 பொதுமக்களின்நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி டிசெம்பர் 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமைதிறந்து வைக்கப்பட்டது. எனினும் இந்த நினைவுத்தூபியை நிர்மாணிக்க முற்பட்டபோது அதனைத்தடுக்க படைப் புலனாய்வாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களைவிடுத்து வந்ததாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா தெரிவித்தார்.