வருடல்

செய்திகள்

முன்னாள் போராளிகளின் மீள்குடியமர்வு, மற்றும் வாழ்வாதார உதவித் திட்டங்களில் வட மாகாண சபையுடன் இணைந்து செயற்பட மங்கள சமரவீர இணக்கம்:

முன்னாள் போராளிகளின் மீள்குடியமர்வு, அவர்களுக்கான இலகு கடன்கள், வாழ்வாதார உதவித் திட்டங்களை வடக்கு மாகாண சபையுடன் இணைந்து சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று சிறிலங்கா நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு நேற்று பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர, மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

2018 வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திட்டங்களை வடக்கில் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது ஆராயப்பட்டது.

வடக்கிற்கு ஒதுக்கப்பட்டுள்ள 1000 மில்லியன் ரூபாவை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்தலாம் என்று இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

இதில் நிதியமைச்சின் அதிகாரிகள், மத்திய வங்கி அதிகாரிகள், வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களின் செயலர்களும் கலந்து கொண்டனர்.

இந்த வரவுசெலவுத் திட்டத்தில், முன்னாள் போராளிகளின் மீள்குடியமர்வு, அவர்களின் வணிக முயற்சிகளுக்கான இலகு கடன்கள், வாழ்வாதார வாய்ப்புகளுக்கான உதவிகளை வழங்குவதற்கும் வழிகள் செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டங்களை வடக்கு மாகாண சபையுடன் இணைந்து முன்னெடுக்குமாறு, இதன் போது வடக்கு மாகாண முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக வடக்கு மாகாணசபையின் குழு ஒன்றை நியமிக்குமாறு முதலமைச்சரிடம் கேட்டுக் கொண்ட மங்கள சமரவீர, தமது அமைச்சுடன் அவர்களை இணைந்து செயற்படுமாறும் தெரிவித்தார்.

அதேவேளை, வரவுசெலவுத் திட்ட நடைமுறைப்படுத்தல் தொடர்பாக நேற்று யாழ்ப்பாணத்தில் வணிகர் கழகப் பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள், சிறிய நடுத்தர கைத்தொழில் முயற்சியாளர்களுடனும், சிறிலங்கா நிதியமைச்சர் தனித்தனியாக கலந்துரையாடல்களை நடத்தினார்.

BBC TAMIL NEWS 03/04/2018

மாவீரர் நாள் 2017 கிளிநொச்சி

மாவீரர் நாள் 2017 முள்ளியவளை

மாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்

முன்னைய செய்திகள்
May 2018
M T W T F S S
« Apr    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்:
Thanikasalam140vnad.jpg.pagespeed.ic.GtNcT-hvj2
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
Twitter Varudal News
  • யாழ், பல்கலைக் கழக வளாகத்தில் இருந்து முள்ளிவாய்க்கால் மண் நோக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள்!
  • ஒரு பெரும் சரித்திரம் ஊமையாய் உறங்கும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 9 ஆம் ஆண்டு நினைவு இன்று!
  • தமிழர்களுக்கு நீதி வழங்கப்படாமல் தொடர்ந்தும் ஏமாற்றும் சிறீலங்கா – ஜெரமி கோபின் கடும் எச்சரிக்கை:
  • யாழிலிருந்து முள்ளிவாய்க்கால் நோக்கி “ஈகச்சுடர்” ஏந்திய வாகன பவனி!
  • வடமாகாணத்தின் 5 மாவட்டங்களில் இருந்து முள்ளிவாய்க்கால் மண் நோக்கி விசேட பேரூந்து சேவை!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை