வருடல்

செய்திகள்

யாழில் ஒன்றுகூடிய தமிழ் ஆயுதக் குழுக்கள்!

தமிழ் ஆயுதக் குழுக்கள் திடீரென யாழில் ஒன்றுகூடியுள்ளனர். ஆனால் இது நாட்டிற்கான அல்லது தமிழ் மக்களுக்கான செயற்திட்டங்களுக்கான ஒன்றுகூடல் என மட்டும் யாரும் நினைத்துவிடவேண்டாம்.

முன்னாள் போராளியொருவரது குழந்தையின் பிறந்த நாள் விழாவிற்கே முன்னாள் ஆயுதக்குழுக்கள் ஒன்று திரண்டு பங்கெடுத்துள்ளனர்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான குறித்த நபர் தற்போது புளொட் அமைப்பின் முக்கியஸ்தராகியுள்ளார். அவ்வகையில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன், மத்திய குழு உறுப்பினர் ஆர்.ஆர் எனப்படும் இராகவன் அவ்வமைப்பின் மாகாணசபை உறுப்பினர் கஜதீபன் உள்ளிட்டோர் விழாவில் பங்கெடுத்திருந்தனர்.

அதுமட்டுமன்றி இதுவரைகாலமும் பிளவுண்ட ஈபிஆர்எல்எவ் கட்சியின் அனைத்து தலைவர்களும் நீண்ட இடைவெளியின் பின்னர் ஒரே வைபவத்தில் பங்கெடுத்துள்ளனர்.

சுரேஸ்பிறேமசந்திரன், வரதராஜாப்பெருமாள்,சுகு மற்றும் முன்னாள் இராணுவத்தளபதியும் தற்போதைய ஈ.பி.டி.பி செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா, மற்றும் அதிலிருந்து வெளியேறிய வடமாகாண எதிர்கட்சி தலைவர் சி.தவராசா என அனைவரும் சென்றிருந்தனர்.

அதே போன்று ரெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உட்பட உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட்ட கூட்டமைப்பின் இளைஞர்கள் சிலரும் பங்கெடுத்திருந்தனர். இவர்களுடன் முன்னாள் வடமாகாண அமைச்சர் பொ.ஜங்கரநேசனும் பங்கெடுத்திருந்தார்.

இதேவேளை விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் முக்கியஸ்தரான பசீர் காக்கா போன்றவர்களும் இந்நிகழ்வில் பங்கெடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தென்னிலங்கையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் குடும்ப நிகழ்வுகளில் மனக்கசப்புக்களை தாண்டி கலந்து கொள்வது வழமையாகும்.எனினும் தமிழ் அரசியல் தலைவர்களோ யுத்த கள எதிரிகள் போன்று முகங்களை பொது நிகழ்வுகளில் திருப்பி கொள்வது வழமையாகும்.இந்நிலையில், பொது அரங்கில் தமது முரண்பாடுகளை தாண்டி அரசியலில் முன்னாள் ஆயுதக்குழுக்களது பிரமுகர்கள் பங்கெடுத்திருந்தமை கவனத்தை ஈர்த்துள்ளது. அதிலும் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியினது நிகழ்வினில் பங்கெடுத்திருந்தமை கவனத்தை ஈர்த்திருந்தது.

இதனிடையே தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர்கள் பலருக்கு அழைப்புவிடுக்கப்பட்ட போதும் அவர்கள் எவரும் இந் நிகழ்வில் பங்கெடுத்திருக்கவில்லையெனவும் கூறப்படுகின்றது.

BBC TAMIL NEWS 03/04/2018

மாவீரர் நாள் 2017 கிளிநொச்சி

மாவீரர் நாள் 2017 முள்ளியவளை

மாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்

முன்னைய செய்திகள்
June 2018
M T W T F S S
« May    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்:
Thanikasalam140vnad.jpg.pagespeed.ic.GtNcT-hvj2
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
Twitter Varudal News
  • இலங்கைக்குள் நுளைய 100 தமிழர்களுக்குத் தடை!
  • மாகாணசபைத் தேர்தல் விவகாரம் – முடிவின்றி முடிந்த கட்சித் தலைமைகள் கூட்டம்!
  • ராஜபக்சவினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சர்வதேசம் பொருளாதாரத் தடை விதிக்கும் – அமைச்சர் எச்சரிக்கை!
  • சிறீலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞ்ஞன் பலி – வீதியை மறித்து மக்கள் போராட்டம்!
  • மலேசியா சிறையில் மரணமான விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை