வருடல்

செய்திகள்

யாழ் பல்காலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா – 1706 பேருக்கு பட்டமளிப்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 33ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் வேந்தா் பேராசிரியா் எஸ்.பத்மநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

ஏழு (7) அமர்வுகளாக நடைபெறவுள்ள இந்த பட்டமளிப்பு விழாவில் கலை, மருத்துவ, விஞ்ஞான, பொறியியல் மற்றும் பட்டப்பின் கற்கைகள் பீடங்களைச் சேர்ந்த 1223 உள்வாரி பட்டதாரிகளும், 43 டிப்ளோமா பட்டதாரிகளுக்கும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதோடு, யாழ். பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தைச் சேர்ந்த 440 வெளிவாரிபட்டதாரிகளின் பட்டங்கள் உறுதிப்படுத்தப்படவுள்ளன.

இம்முறை, இருவர் கலாநிதிப் பட்டங்களையும், 7 பேர் முதுமெய்யியல்மாணி பட்டங்களையும் , வவுனியா வளாகத்தைச் சேர்ந்த 170 பேர் முதுகல்விமாணி பட்டங்களையும் , 7 பேர் சுகாதார முகாமைத்துவத்தில் தகைமைச் சான்றிதழ்களையும், 21 பேர் சைவ சித்தாந்தத்தில் முதுமாணி பட்டங்களையும் , 11 பேர் முதுவியாபாரமாணி பட்டங்களையும் , 4 பேர் முகாமைத்துவத்தில் பட்டப்பின் தகைமைச் சான்றிதழ்களையும், 95 பேர் மருத்துவமாணி சத்திரசிகிச்சைமாணி பட்டங்களையும் , ஒருவர் மருத்துவ விஞ்ஞானமாணி பட்டத்தையும், 31 பேர் பொறியியல் விஞ்ஞானமாணி பட்டங்களையும் , 78 பேர் சிறப்பு மற்றும் 79 பேர் விஞ்ஞானமாணி பொதுப் பட்டங்களையும், 16 பேர் கணினி விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணி சிறப்புப் பட்டங்களையும், 8 பேர் பிரயோக விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணி சிறப்புப் பட்டங்களையும், 7 பேர் விவசாய விஞ்ஞானமாணி பட்டங்களையும், 146 பேர் நுண்கலைமாணி ( கர்நாடக சங்கீதம், நடனம், சித்திரமும் வடிவமைப்பு) பட்டங்களையும், 459 பேர் சிறப்புக் கலைமாணி, 81 பேர் பொதுக் கலைமாணிப் பட்டங்களையும் பெறவிருப்பதோடு, 5 பேர் விஞ்ஞானத்தில் தகைமைச் சான்றிதழ்களையும், 9 பேர் இதழியலில் தகைமைச் சான்றிதழ்களையும், 16 பேர் சந்தைப்படுத்தல் முகாமைத்துவத்தில் தகைமைச் சான்றிதழ்களையும், 13 பேர் மனிதவள முகாமைத்துவத்தில் தகைமைச் சான்றிதழ்களையும் பெறவிருக்கின்றனர்.

வெளிவாரியாகப் பட்டங்களைப் பெறுகின்ற 374 கலைமாணிப் பட்டதாரிகளினதும், ஒரு இசைமாணிப் பட்டதாரியினதும், 3 நடனமாணி பட்டதாரிகளினதும் 37 வணிகமாணி, 25 வியாபார முகாமைத்துவமாணி பட்டதாரிகளினதும் பட்டங்கள் உறுதிப்படுத்தப்படவுள்ளன.

மொத்தமாக இம்முறை 1706 பட்டங்கள் வழங்கப்படவிருப்பதோடு, சகல கற்கை நெறிகளுக்குமாக 34 தங்கப் பதக்கங்களும், 48 பரிசில்கள் மற்றும் புலமைப்பரிசில்களும் வழங்கப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

BBC TAMIL NEWS 03/04/2018

மாவீரர் நாள் 2017 கிளிநொச்சி

மாவீரர் நாள் 2017 முள்ளியவளை

மாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்

முன்னைய செய்திகள்
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்:
Thanikasalam140vnad.jpg.pagespeed.ic.GtNcT-hvj2
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
Twitter Varudal News
  • தேசியத் தலைவரால் பெற்றெடுக்க முடியாததை எந்த தமிழ் தலைமைகளாலும் பெறமுடியாது: கிருஸ்ணபிள்ளை!
  • தமிழர்கள் என்றும் போராட்டத்தை கைவிடக்கூடாது – தேரர் முகநூல் ஊடாக தெரிவிப்பு!
  • மாகாணசபைகளின் எதிர்காலம் குறித்து இன்று ஜனாதிபதி தலைமைமையில் ஆராய்வு!
  • இந்திய இராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்களுக்கு யாழில் அஞ்சலி!
  • அனந்தி  தலைமையில் “ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம்” எனும் புதிய கட்சி உதயம்!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை