வருடல்

செய்திகள்

ரணில் பக்கம் தாவும் சிறீலங்கா சுதந்திரக்கட்சி அமைச்சர்கள்:

உள்ளூராட்சித் தேர்தலை அடுத்து, கொழும்பு அரசியலில் ஏற்பட்ட குழப்ப நிலை தற்போது, மீண்டும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சாதகமான திருப்பத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி நீக்கம் செய்து விட்டு, கூட்டு எதிரணியின் ஆதரவுடன், நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராகக் கொண்ட அரசாங்கத்தை அமைக்க, சிறிலங்கா சுதந்திரக் கட்சி முற்பட்டதால், நேற்று முன்தினம் கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த இதற்கான நடவடிக்கைகளை, மகிந்த ராஜபக்சவுடன் பேசி முன்னெடுத்திருந்தார்.

இதற்கமைய, கூட்டு எதிரணியின் தலைவர்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து பேச்சு நடத்தி, நிமால் சிறிபால டி சில்வாவின் தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவு அளிக்க இணக்கம் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, சிறிலங்கா பிரதமரை பதவி நீக்கம் செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து சட்டமா அதிபர் மற்றும் சட்ட நிபுணர்களுடன் தாம் ஆலோசனை நடத்துவதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்திருந்தார்.

எனினும், சிறிலங்கா பிரதமர் தாம் பதவி விலகப் போவதில்லை என்றும், அரசியலமைப்புக்கு அமைய தமது கடமைகளை முன்னெடுக்கப் போவதாகவும் அறிவித்தார்.

இந்த நிலையில், நிமால் சிறிபால டி சில்வாவைப் பிரதமராக நியமிப்பதற்கு ஆதரவு கோரும் கடிதத்தில், போதிய கையெழுத்துக்களைப் பெற முடியாத நிலையில், இந்த முயற்சி பின்னடைவைச் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐதேகவின் உள்மட்டத்தில் ஏற்பட்ட குழப்பங்களை தீர்த்து, தமக்கான ஆதரவை உறுதிப்படுத்துவதில் வெற்றிபெற்றுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, நேற்று ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராகத் தொடர்வதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆதரவை வெளிப்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக கொண்ட அரசாங்கத்தை அமைக்கும் திட்டத்துக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் ஆதரவளிக்க முன்வராததை அடுத்தே, மைத்திரிபால சிறிசேன அமைச்சரவை மாற்றத்தை ஏற்படுத்தி தற்போதைய அரசாங்கத்தை முன்னெடுக்க இணங்கியுள்ளார் எனக் கூறப்படுகிறது.

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலரும் அமைச்சருமான துமிந்த திசநாயக்க, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலரும் அமைச்சருமான மகிந்த அமரவீர, சரத் அமுனுகம, மகிந்த சமரசிங்க உள்ளிட்ட அமைச்சர்களே இவ்வாறு எதிர் நிலைப்பாட்டில் உள்ளனர்.

அதேவேளை, தம்மை பிரதமராக ஏற்றுக் கொள்ள இணங்கியுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த துமிந்த திசநாயக்க, மகிந்த அமரவீர, சரத் அமுனுகம, மகிந்த சமரசிங்க, மோகன்லால் கிரேரோ உள்ளிட்ட தலைவர்களுக்கு இன்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இராப்போசன விருந்து வழங்கப்படவுள்ளது.

இதையடுத்து, தற்போதைய அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாவீரர் நாள் 2018 – டென்மார்க்

மாவீரர் நாள் 2018 – கனடா (ரொரண்டோ)

மாவீரர் நாள் 2018 – லண்டன் (எக்ஸெல்)

மாவீரர் நாள் 2018 – பிரித்தானியா (ஒக்ஸ்பேட்)

மாவீரர் நாள் 2018 – சுவிஸ்

மாவீரர் நாள் 2018 – பிரான்ஸ்

27 November 2018
27 November 2018
BBC TAMIL NEWS 21/11/2018

முன்னைய செய்திகள்
December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
அதிகமாக பார்க்கப்பட்டவை
Twitter Varudal News
  • பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக மஹிந்த ராஜபக்ச அறிவிப்பு!
  • யாழ், பல்கலைக்கழகத்தில் “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கத்திற்கு அஞ்சலி!
  • யாழ் –  காரைநகரில் முத்தமிழ் விழா!
  • மைத்திரி, ரணில், கரு – மூவரும் இரகசியப் பேச்சு!
  • பாராளுமன்றத்தை கலைக்க முடியாது – உச்ச நீதிமன்றின் தீர்ப்பு வெளியானது!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை