வருடல்

செய்திகள்

ராகுல் காந்திக்கும் புலிகளுக்குமிடையில் தொடர்பு – புதிய புரளி கிளப்பும் சுப்பிரமணியம் சுவாமி:

எனது தந்தை ராஜீவ் காந்தியை கொன்ற கொலையாளிகளை நாங்கள் மன்னித்து விட்டோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார். காலங்கடந்த அவரது இந்த கருத்து அரசியல் ஆதாயத்துடன் வெளியிடப்பட்டதாக தமிழ்நாட்டை சேர்ந்த தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், ராஜீவ் காந்தியை பண ஆதாயத்துக்காக கூலிப்படையை ஏவி கொன்று விட்டார்கள் என பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியசாமி தற்போது குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த சுப்ரமணியசாமி கூறியதாவது:- ராஜீவ் காந்தியை ஏன் கொன்றோம்? என்று முன்னர் விடுதலைப் புலிகள் கூறிய காரணத்தில் எங்களுக்கு எதிராக போரிட இந்திய ராணுவத்தை அனுப்பியதால் கொன்றோம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், விடுதலைப் புலிகளுடன் எங்கள் ராணுவத்தால் தனித்து போரிட முடியவில்லை. உதவிக்கு உங்கள் ராணுவத்தை அனுப்புங்கள் என்று இலங்கை அரசு கேட்டு கொண்டதால், நமது பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில்தான் இந்திய ராணுவத்தை இலங்கைக்கு ராஜீவ் காந்தி அனுப்பி வைத்தார்.

இந்நிலையில், ராஜீவ் கொலையாளிகளுக்கு காட்டப்படும் கருணை அவரது படுகொலையில் சந்தேகங்களை எழுப்பியுள்ளது. கொலையாளிகளை மன்னித்து விட்டதாக கூறும் ராகுல் காந்திக்கு தேசபக்தி குறைவு என்பதையும் காட்டுகிறது. ராஜீவ் காந்தி ஒரு உண்மையான தேசியவாதி. அவரது வாழ்நாளில் முக்கியமான காலகட்டத்தில் படுகொலை செய்யப்படுவதற்கு காரணமாக இருந்தவர்களுக்கு கருணை காட்டவோ, மன்னிக்கவோ கூடாது.

வெளிநாட்டினருடன் சேர்ந்து நமது முன்னாள் பிரதமரை கொன்றவர்களுக்கு நாம் ஏன் கருணை காட்ட வேண்டும்? என்பது எனக்கு புரியவில்லை. ஆரம்பத்தில், இந்த கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு ஆயுள் தண்டனையாக தண்டனை குறைக்கப்பட்டது. இந்த தண்டனை நமது நாட்டின் முன்னாள் பிரதமரை கொன்றவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை, அவரது தந்தையை கொன்றவர்களுக்கானது அல்ல என்பதை ராகுல் காந்தி புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்விவகாரத்தில் விடுதலைப் புலிகளுடன் ஏதோ ‘புரிதல்’ உள்ளதாக தோன்றுவதால் இதில் விசாரணை நடத்தப்பட வேண்டும். தண்டனை அனுபவித்து வருபவர்களின் உறவினர்கள் மட்டுமே அவர்களை சிறையில் சந்திக்க முடியும். அவர்களது உறவினராக இல்லாத பிரியங்கா காந்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொலையாளிகளை ஏன் சென்று சந்திக்க வேண்டும்?

மேலும், நளினியின் மகள் இங்கிலாந்தில் படிக்க தேவையானவற்றை சோனியா காந்தி கவனித்து கொண்டார். இந்திரா காந்தி பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் அறிவியல் பாடம் படிப்பதற்காக நளினிக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் ஏன் இவ்வளவு அனுதாபம் காட்டுகிறார்கள்? என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதில் ஏதோ தவறு இருக்கிறது என்று நான் சந்தேகப்படுகிறேன். மேற்கண்டவாறு சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.

BBC TAMIL NEWS 03/04/2018

மாவீரர் நாள் 2017 கிளிநொச்சி

மாவீரர் நாள் 2017 முள்ளியவளை

மாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்

முன்னைய செய்திகள்
June 2018
M T W T F S S
« May    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்:
Thanikasalam140vnad.jpg.pagespeed.ic.GtNcT-hvj2
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
Twitter Varudal News
  • இலங்கைக்குள் நுளைய 100 தமிழர்களுக்குத் தடை!
  • மாகாணசபைத் தேர்தல் விவகாரம் – முடிவின்றி முடிந்த கட்சித் தலைமைகள் கூட்டம்!
  • ராஜபக்சவினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சர்வதேசம் பொருளாதாரத் தடை விதிக்கும் – அமைச்சர் எச்சரிக்கை!
  • சிறீலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞ்ஞன் பலி – வீதியை மறித்து மக்கள் போராட்டம்!
  • மலேசியா சிறையில் மரணமான விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை