வருடல்

செய்திகள்

‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்!

  • மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட  மண்ணில் மனித எலும்புகள் காணப்பட்ட நிலையில் குறித்த வளாகத்தில் இன்று புதன் கிழமை(16) காலை மன்னார் நீதிவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் அகழ்வு பணிகள் ஆரம்பமாகியது.

லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்ட மண் மன்னாரில் பல இடங்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.

இதன் போது மன்னார் எமில் நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கொட்டப்பட்ட மண்ணில் மனித எலும்புகள் காணப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் குறித்த வீட்டின் உரிமையாளர் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதி மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த நிலையில் மன்னார் பொலிஸார் குறித்த வீட்டிற்கு சென்று கொட்டப்பட்ட மண்ணினை பார்வையிட்டதோடு, மன்னார் நீதி மன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் மார்ச் மாதம் 27 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா மற்றும்  விசேட சட்ட வைத்திய நிபுணர் ஆகியோர் முன்னிலையில் கொட்டப்பட்ட மற்றும் வீட்டு வளாகத்தினுள் பரவப்பட்ட மண்ணில் இருந்து சந்தேகத்திற்கிடமான எலும்புத்துண்டுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.

அதனைத்தொடர்ந்து மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த ‘லங்கா சதொச’ விற்பனை கட்டிட நிர்மாணப்பணிகள் இடை நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில் மண் அகழ்வு செய்யப்பட்டு மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்ட ‘லங்கா சதொச கட்டிட பகுதிக்கு நேற்று செவ்வாய்க்கிழமை(15) மாலை மன்னார் நீதிவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா மற்றும் விசேட சட்ட வைத்திய நிபுணர், விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸார் ஆகியோர் சென்று பார்வையிட்டதோடு, நேற்று செவ்வாய்க்கிழமை முதல் கட்ட அகழ்வு பணிகள் இடம்பெற்ற நிலையில் இன்று புதன்கிழமை (16) காலை 8 மணியளவில் மன்னார் நீதிவான் முன்னிலையில் அகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது மேலும் பல மனித எலும்புத்துண்டுகள் மீட்கப்பட்டன. உடைக்கப்பட்ட குறித்த கட்டிடப் பகுதியில் அதிகளவான நீர் காணப்பட்டமையினால் நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் நீதிவான் பார்வையிட்டு அகழ்வுகள் இடம்பெற்றது.

எனினும் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நிலையில் காலை 9.20 மணியளவில் அகழ்வுப்பணிகள் நிறுத்தப்பட்டது. தற்போது குறித்த பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மீண்டும் அகழ்வுப்பணி நாளை (17) வியாழக்கிழமை இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BBC TAMIL NEWS 03/04/2018

மாவீரர் நாள் 2017 கிளிநொச்சி

மாவீரர் நாள் 2017 முள்ளியவளை

மாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்

முன்னைய செய்திகள்
September 2018
M T W T F S S
« Aug    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்:
Thanikasalam140vnad.jpg.pagespeed.ic.GtNcT-hvj2
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
Twitter Varudal News
  • இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு பிரான்ஸின் அதி உயர்ந்த தேசிய விருது!
  • ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஐந்து முக்கிய உறுப்பினர்கள்  பதவியிலிருந்து அதிரடி நீக்கம்!
  • போர்க்குற்ற விசாரணையில் இருந்து படையினரை பாதுகாக்க அமெரிக்கா செல்கிறார் மைத்திரி!
  • பலாலி விமான நிலைய விவகாரம் – புது டெல்லியில் குழப்பம்!
  • ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் சம்பந்தன் அவசர கடிதம்.
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை