வருடல்

செய்திகள்

வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்ய விசேட கட்டமைப்பை உருவாக்க வேண்டும் – கஜேந்திரகுமார்;

தென்னிலங்கையுடன் ஒப்பிடும்போது வடக்கு கிழக்கு உள்ளூராட்சி சபைகளுக்குட்டபட்ட பிரதேசங்கள் நாற்பது வருடங்கள் பின்தங்கிய நிலையில் இருப்பதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எவ்வாறு சுனாமிக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வெளிநாடுகளில் இருந்து நிதி பெறப்பட்டு பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டதோ அதே போல யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய விசேட கட்டமைப்பு ஒன்றினை உருவாக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்த் தேசியப் பேரவையின் உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் புத்தூரில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்,“வடக்கிழக்கைப் பொறுத்தவரை இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் அபிவிருத்திக்குரிய தேர்தல் அல்ல.

உங்களுக்கு நன்றாகத் தெரியும் இந்த வடகிழக்குப் பிரதேசம் கடந்த 30 முப்பத்தைந்து வருடம் போரால் பாதிக்கப்பட்ட பிரதேசம். இந்தப் பிரதேசம் ஒரு ஆயுதப் போராட்டத்தைஅ கட்டி எழுப்பிய பிரதேசம் என்ற வகையில் ஸ்ரீலங்கா அரசினால் பொருளாதாரத் தடைக்கு உள்ளாக்கப்பட்ட பிரதேசம்.

இந்தவகையில் இப்பிரதேசம் இயற்கையாகப் பாதிப்படைந்த பிரதேசம் அல்ல. திட்டமிட்ட வகையிலே இந்த நாட்டினுடைய அரசாங்கம் ஒரு விடுதலைப் போராட்டத்தைத் தோற்கடிப்பதற்காக 30 முப்பத்தைந்து வருடங்களாக இந்தப் பிரதேசத்தை முடக்கி மக்களை வாழ முடியாத அளவிற்கு தங்களுடைய தொண்டைகளைப் பிடித்து இறுக்கி இந்தப் பிரதேசத்தை விட்டு வெளியேறினாலும் பறவாயில்லை அந்தப் போராட்டத்தை ஆதரிக்கக்கூடியவகையிலே பொதுமக்கள் இருக்கக்கூடாது என்ற அளவிற்கு அவர்களுடைய நிகழ்ச்சிநிரல் கடந்த முப்பத்தைந்து வருடங்களாக இருந்தது.

நாங்கள் வடக்கிழக்கு மண்ணை எடுத்துப்பார்த்தால் தென்னிலங்கையிலுள்ள உள்ளூராட்சிசபைகளோடு ஒப்பிட்டுப்பார்க்க முடியாத அளவிற்கு நாங்கள் நாற்பது வருடங்களுக்கு பின்னுக்கு நிற்கின்றோம். அதுதான் ஜதார்த்தம்.

ஆனால் ஸ்ரீலங்கை அரசைப் பொறுத்தவரையில் அவர்கள் உள்ளூராட்சி சபைக்கு நிதி ஒதுக்குகின்ற பொழுது தென்னிலங்கையின் தற்போதைய நிலையினை வைத்தே வடக்கு கிழக்கிற்கும் நிதி ஒதுக்குகின்றார்கள். இந்த உள்ளூராட்சி சபைகளூடாக எதைச் செய்வது என மக்களிடம் கேட்கின்றபோது வீதிகளையாவது போட்டுத்தாருங்கள் என்ற நிலையில்தான் வடக்கு கிழக்கு பிரதேசம் தற்போதும் இருக்கின்றது. இதனைத் தாண்டிய நவீன அபிவிருத்தித் திட்டங்களுக்குள் நகரமுடியாதுள்ளது. ஏனெனில் இங்கு அடிப்படைக் கட்டமைப்புக்களே சிதைந்துபோயுள்ளன.

40 ஐம்பது வருடங்களுக்கு முன்னர் எமது மக்கள் என்னென்ன அடிப்படை வசதிகளைக் கேட்டிருப்பார்களோ அதைத்தான் இன்றும் செய்யக்கூடியதாக உள்ளது.
அந்தவகையில் இந்த உள்ளூராட்சி சபைகளை சரியானமுறையில் கையாள்வதற்கு எமது அமைப்பு நேர்த்தியான தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றினைத் தயாரித்துள்ளது.

அந்தம தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள அடிப்படை வசதிகளும் அபிவிருத்தித் திட்டங்களும் தென்னிலங்கைக்கும் வடக்கு கிழக்கிற்குமான நாற்பது வருட இடைவெளியை படிப்படியாகக் குறைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் முக்கிய மான ஒரு வேலைத்திட்டம் வடக்குக் கிழக்குப் பிரதேசத்தை போரால் பாதிக்கப்பட்ட பிரதேசமாக அடையாளப்படுத்தி சுனாமியால் தாக்கப்பட்ட பிரதேசங்களை எவ்வாறு கட்டமைப்பு ஒன்றினை உருவாக்கி கரையோரப் பிரதேசங்கள் புனரமைக்கப்பட்டதோ அதேபோல ஒரு விசேட பிரதேசமாகக் கருதி அந்தப் பிரதேசங்களைக் கட்டியெழுப்புவதற்காக சட்டரீதியான மாற்றங்களை ஏற்படுத்தி சர்வதேச நிதியம் ஒன்றினை உருவாக்கி நிதியினை வெளிநாடுகளில் இருந்து நேரடியாக உள்ளூராட்சி, மாகாண சபைகளூடாகப் பெற்று புனரமைக்கப்பட வேண்டும்- என்றார்

BBC TAMIL NEWS 03/04/2018

மாவீரர் நாள் 2017 கிளிநொச்சி

மாவீரர் நாள் 2017 முள்ளியவளை

மாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்

முன்னைய செய்திகள்
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்:
Thanikasalam140vnad.jpg.pagespeed.ic.GtNcT-hvj2
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
Twitter Varudal News
  • 15 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கி பின் கொலை செய்தவருக்கு மரணதண்டனை விதித்த இளஞ்செழியன்!
  • பழையதை விட ஆபத்தான புதிய பயங்கரவாத தடைச் சட்டம்!
  • இனிவரும் காலங்கள் மிகவும் ஆபத்தானது- மிக கவனமாக இருக்குமாறு தமிழர்களுக்கு விக்கி வேண்டுகோள்!
  • சிறீலங்காவை புறக்கணித்த 35 நடுகள்!
  • சர்ச்சைகளுடன் நிறைவடைந்த வடமாகாணசபையின் இறுதி அமர்வு!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை