வருடல்

செய்திகள்

வடமராட்சியில் இருந்து கலைக்கப்பட சிங்கள மீனவர்கள் முல்லைத்தீவில் குடியேற்றம்!

வடமராட்சி கிழக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள் முல்லைத்தீவு – சாலைப் பகுதியில் வாடிகளை அமைத்து கடல் அட்டை பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

வடமராட்சி கிழக்கில் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நியாயதிக்க எல்லைப் பரப்புக்குள் உள்ள அரச நிலத்தில் பிரதேச செயலாளரின் அனுமதி இன்றி வாடி அமைத்துத் தொழில் புரிந்த தென்னிலங்கை மீனவர்களுக்கு எதிராக, மருதங்கேணிப் பிரதேச செயலாளர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

அதனை அடுத்து, நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து, வடமராட்சி கிழக்குப் பகுதியில், அத்துமீறி வாடி அமைத்து கடல் அட்டை பிடிப்பில் ஈடுபட்டு வந்த 8 நிறுவனங்களையும், உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு, கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் கடந்த 25ஆம் திகதி உத்தரவு பிறப்பித்தது. அதனை அடுத்து, அங்கிருந்த மீனவர்கள் தமது வாடிகளை அகற்றி அங்கிருந்து சென்றனர்.

மருதங்கேணி, தாளையடிப் பகுதிகளில் இருந்து 8 நிறுவனங்களுக்கும் சொந்தமான 32 வாடிகளில் வேலை செய்த 850க்கும் மேற்பட்ட தென்னிலங்கை மீனவர்கள் அங்கிருந்து வெளியேறினார்கள். அவர்கள் முல்லைத்தீவு – சாலைப் பகுதியில் கடல் அட்டை பிடிப்பதற்கான வாடிகளை அமைக்கின்றனர்.

சாலைப் பகுதியில் உள்ள கடற்படைத் தளத்தை அண்டிய பகுதிகள் உள்ளூர் மக்களோ அல்லது மீனவர்களோ கடந்த காலத்தில் செல்ல அனுமதிக்கப்படாத நிலையில், பிற மாவட்ட மீனவர்கள் மட்டும் அப்பகுதியில் தொழில் புரிந்து வந்தனர். இந்த நிலையிலேயே, தற்போது அதிக மீனவர்கள் அப்பகுதியில் வந்து குவிந்த வண்ணம் உள்ளதால், உள்ளூர் மீனவர்கள் பல பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

BBC TAMIL NEWS 03/04/2018

மாவீரர் நாள் 2017 கிளிநொச்சி

மாவீரர் நாள் 2017 முள்ளியவளை

மாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்

முன்னைய செய்திகள்
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்:
Thanikasalam140vnad.jpg.pagespeed.ic.GtNcT-hvj2
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
Twitter Varudal News
  • தேசியத் தலைவரால் பெற்றெடுக்க முடியாததை எந்த தமிழ் தலைமைகளாலும் பெறமுடியாது: கிருஸ்ணபிள்ளை!
  • தமிழர்கள் என்றும் போராட்டத்தை கைவிடக்கூடாது – தேரர் முகநூல் ஊடாக தெரிவிப்பு!
  • மாகாணசபைகளின் எதிர்காலம் குறித்து இன்று ஜனாதிபதி தலைமைமையில் ஆராய்வு!
  • இந்திய இராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்களுக்கு யாழில் அஞ்சலி!
  • அனந்தி  தலைமையில் “ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம்” எனும் புதிய கட்சி உதயம்!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை