வருடல்

செய்திகள்

வவுனியாவில் – சாரதியின் தாக்குதலுக்கு உள்ளான மாணவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

வவுனியாவில் இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி நடத்துனர்கள் மாணவன் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய போது உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையில் அங்கிருந்த பொது மக்களால் காப்பாற்றப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

பூவரசன்குளத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து மன்னார் வீதியில் குருமன்காட்டு சந்தியைக் கடந்து அதிக வேகத்துடன் தனியார் பேரூந்தை முந்திச்செல்ல முட்பட்டுள்ளது. இதன்போது மாணவன் ஒருவன் தனியார் வகுப்புக்கு செல்வதற்காக பாதசாரி கடவையை கடந்து கொண்டிருந்த சமயம் அவனை மோதும் வகையில் இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி பேரூந்தை செலுத்தியுள்ளார்.

இதனால் அச்சமடைந்த மாணவன் தன்னை பாதுகாத்துக்கொண்டு பேரூந்தின் சாரதிக்கு “பார்த்து வாகனத்தை ஓட்ங்கள்” என கூறியுள்ளான். இதனை அவதானித்த சாரதி பேரூந்தை நிறுத்திவிட்டு நடத்துனர் மற்றும் அங்கு மதுபோதையில் இருந்த மற்றுமொருவருடன் இணைந்து மாணவனை சரமாரியாக தாக்கியுள்ளனர். தமது கோபம் அடங்காத  நிலையில் அங்கிருந்த வேலிக்கரையில் மாணவனை தள்ளிவிட்டு அங்கிருந்த இரும்பு கம்பிகள் மற்றும் தடி கல்லுகளால் தாக்கியுள்ளனர்.

இதனை சகிக்க முடியாத லொத்தர் விற்கும் பெண்மணி கூக்குரல் இட்டதுடன் பேரூந்தில் வந்தவர்களை ஓடிவந்து மாணவனை காப்பாற்றுமாறு கோரியுள்ளார். இதனையடுத்து பேரூநதில் வந்தவர்கள் சாரதி நடத்துனர் மற்றும் மதுபோதையில் இருந்த அவர்களது நண்பரிடம் இருந்த கம்பிகள் தடிகளை பறித்து எறிந்ததுடன் மாணவனை கடும் காயங்களுடன் காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந் நிலையில் மாணவனுக்கு கொலை வெறித்தாக்குதலை நடத்திய சாரதிக்கு அங்கிருந்த தகரமொன்றும் காயத்தை ஏற்படுத்தியதையடுத்து சாரதியும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

அங்கிருந்த பொது மக்கள் இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி நடத்துனர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்ததுடன் அவர்களது அராஜகம் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தனர். இவ்விடயம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

BBC TAMIL NEWS 25/01/2019

வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
March 2019
M T W T F S S
« Feb    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • வீட்டுத்திட்ட நிதி வழங்கப்படாததை கண்டித்து மக்கள் போராட்டம்:
  • இராணுவத்தின் போர்க்குற்ற ஆதாரங்கள் என்னிடம்: சரத் பொன்சேகா
  • 6 தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஐ.நா வில் மகஜர் கையளிப்பு:
  • மட்டக்களப்பில் தியாகி அன்னை பூபதிக்கு அஞ்சலி!
  • எமது விருப்பங்களுக்கு மாறாகவே நாம் ஆளப்படுகிறோம் – ஜெப்ரி பெல்ட்மனிடம் இரா.சம்பந்தன் தெரிவிப்பு:
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்