வருடல்

செய்திகள்

2 கோடி ரூபா நிதி லஞ்சமாகவே பெறப்பட்டது – சுரேஸ் பிரேமச்சந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் 2 கோடி ரூபா நிதி ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு மட்டும் வழங்கப்படாததன் பின்னணியில் த.தே.கூட்டமைப்பு மத்திய அரசின் வரவு செலவு திட்டத்திற்கு கையை தூக்கியதற்காக பேசப்பட்ட பேரம் அம்பலமாகியுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

” 2 கோடி ரூபா நிதியை அபிவிருத்திக்காக பெற்றார்கள் என்றால் அதில் தவறிருக்காது. ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறுகிறார் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீட்டுக்கு மேலதிகமாக கொடுக்கப்பட்ட நிதியாகவே இந்த 2 கோடி ரூபா நிதி கொடுக்கப்பட்டதாகும்.

அப்படியானால் நாங்கள் கேட்கிறோம் மேலதிகமாக அபிவிருத்திக்கு கொடுக்கப்பட்ட 2 கோடி ரூபா நிதி எதற்காக சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கொடுக்கப்படவில்லை? அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கொடுக்காவிட்டாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஏன் கொடுக்கப்படவில்லை? இதன் உண்மையான அர்த்தம் மத்திய அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்திற்கு கை உயர்த்தியவர்களுக்கே வழங்கப்பட்டது.

அப்படியானால் 2 கோடி ரூபா நிதி லஞ்சமாகவே பெறப்பட்டிருக்கின்றது.

தற்போது மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கூறுகிறார் சுரேஸ் பிரேமச்சந்திரன் 4 கோடி பெற்றதாக. ஆம் 4 கோடியை நான் என் கைகளில் வாங்கவில்லை. மக்கள் திட்டத்தை எனக்கு கொடுத்தார்கள். அதனை நான் அரசுக்கு கொண்டு சென்றேன்.

அவர்கள் அதனை செய்தார்கள்.எனவே கஜதீபனுக்கு கதை தெரியாவிட்டால் தெரிந்து கதைக்க வேண்டும்.

மேலும் 2 கோடி ரூபா பெற்றுக் கொண்டதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புக் கொண்டிருக்கும் நிலையில் சிலர் மட்டும் தாங்கள் பெறவில்லை எனவும், உறுதிப்படுத்த முடியுமா? எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனை நோக்கி கேள்வி எழுப்புவதன் பின்னணி என்ன? என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

BBC TAMIL NEWS 03/04/2018

மாவீரர் நாள் 2017 கிளிநொச்சி

மாவீரர் நாள் 2017 முள்ளியவளை

மாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்

முன்னைய செய்திகள்
August 2018
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்:
Thanikasalam140vnad.jpg.pagespeed.ic.GtNcT-hvj2
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
Twitter Varudal News
  • யாழில் மற்றுமோர் விபத்து – 27 வயது இளைஞ்ஞன் பலி!
  • மயிலிட்டி மீன்பிடித் துறைமுக மீள்கட்டுமானத் திட்டம் அடுத்தவாரம் ஆரம்பமாம்!
  • யாழில் வன்முறைகளை கட்டுப்படுத்த புதிய கட்டமைப்பு – றெஜினோல்ட்குரே !
  • கொலைக் குற்றத்திற்காக இரு இராணுவத்தினருக்கு மரணதண்டனை!
  • காலம் சென்ற தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு வடமாகாண சபை முதல்வர் இரங்கல்!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை