வருடல்

செய்திகள்

ஏமாற்றி விட்டாராம் – மைத்திரியை கடுமையாக சாடிய எம்.ஏ.சுமந்திரன்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன துரதிஸ்டவசமாக தமிழ் மக்களின் வாக்குகளால் ஜனாதிபதி ஆனவர் . எங்களுடைய கட்சியை கூறு போடுவதற்கு இன்று முனைந்திருக்கிறார். இது அவருடைய இறுதிக்கான ஆரம்பம். என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்று உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் கூறியுள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் மகளிர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

மைத்திரிபால சிறீசேனவிற்கு பகிரங்கமாக நான் சொல்லி வைக்க விரும்புகின்றேன். எங்களுடைய உப்பைத் தின்று வந்து எங்களுடைய கட்சியில் இருந்து ஒருவரை திருடி அரை அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து இருக்கின்ற அந்த மோசமான செயலை செய்த ஜனாதிபதி உனக்கு எப்படி நாங்கள் ஆதரவு கொடுக்கப் போகிறோம். தேர்தலிலேயே தோற்றிருந்தால் ஆறடி நிலத்தில் போயிருப்பேன் என்று சொன்னாவரே ஆறடி நிலத்திற்குள் போகாமல் உங்களை காப்பாற்றியது நாங்கள் அல்லவா. எங்களுடைய மக்களை கூறு போடுவதற்காகவா நாங்கள் கொண்டுவந்தோம்.

இன்று எங்களை பிரித்து போடுவதற்கான சூழ்ச்சி செய்கின்ற கபடமான ஜனாதிபதியாக மாறி இருக்கின்றார் இது அவரது அழிவிற்கான ஆரம்பம் என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்று உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

மேலும், இன்று தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்ற நாம் 15 ஆக குறைந்து இருக்கின்றோம் அதிலும் இங்கு சுற்றித் திரிகின்ற ஒருவரினால் அது மேலும் குறைந்து பதினான்கு ஆகிவிட்டது. அது 14 ஆக இருந்தாலும் இன்றைய சூழலில் தீர்மானிக்கின்ற சக்தி நாங்கள்தான்.

அதனை கவனமாக பிரயோகிக்க வேண்டும். கவனமாக கையாள வேண்டும். அதேவேளை பேரம்பேச வேண்டும் இரண்டையும் செய்கின்றோம். வருகின்ற நாட்களில் எங்களுடைய மக்கள் குழம்பக் கூடாது. ஏன் இவரை சந்தித்தார். ஏன் இவரை சந்தித்தார் என்று. எல்லோரையும் நாம் சந்திப்போம்.

ஆனால் எடுக்கின்ற தீர்மானம் தவறான தீர்மானமாக நாம் எடுக்க மாட்டோம். சரியான தீர்மானத்தை நாம் எடுப்போம். எங்களுடைய மக்களின் நலன் கருதியே அந்த தீர்மானம் எடுக்கப்படும். இந்நிலையில் சிறுபிள்ளைத்தனமாக நாமல் ராஜபக்ச உள்ளார். அவர் சிறுபிள்ளை தான். இன்று காலையில் டுவிட்டரில் சொல்லியிருக்கின்றார் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு ஆலோசிக்கின்றனர் என்று.

கடந்த மூன்று வருடங்களாக எங்களோடு இணைந்து ஆலோசிக்கிறார்கள். அவ்வாறு சொல்லிவிட்டால் நாம் குத்துக்கரணம் அடித்துக்கொண்டு வருவோம் என்று நினைக்கின்றார்கள்.விடுவிப்பதாக இருந்தால் விடுவியுங்கள். இன்றே விடுவியுங்கள். அதற்கு என்ன ஆலோசனை. அது சரியானது நியாயமானது அவர்கள் ஒரு கணமேனும் வைத்திருக்கக்கூடாது.

நேற்றைய தினம் எங்களுடைய அறிக்கை வந்ததன் பின்னர் ஓடோடி கொடுக்கின்ற அறிக்கைகள் இவை. எங்களுடைய எதிர்ப்பை காட்டுவதனால் கைதிகள் விடுவிக்கப்படுவார்களாக இருந்தால் நாம் இன்னும் எதிர்ப்பை காட்டுவோம். அவ்வாறு எதிர்ப்பை காட்டி அவர்களை வெளியே கொண்டு வருவோம். எங்களுடைய அறிக்கை வெளிவரும் வரை இதனைச் சொல்லவில்லை. வந்தவுடன் அதனை சொல்லுகின்றார்கள். அவ்வாறான சில்லறை வியாபாரம் எங்களோடு செய்கின்றார்கள். அவர்கள் எங்களோடுதான் சில்லறை வியாபாரம் செய்கிறார்கள் மற்றவர்களுக்கெல்லாம் ரொக்கப்பண வேலை தான் செய்வார்கள் என தெரிவித்தார்.

BBC TAMIL NEWS 25/01/2019

வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
March 2019
M T W T F S S
« Feb    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • வீட்டுத்திட்ட நிதி வழங்கப்படாததை கண்டித்து மக்கள் போராட்டம்:
  • இராணுவத்தின் போர்க்குற்ற ஆதாரங்கள் என்னிடம்: சரத் பொன்சேகா
  • 6 தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஐ.நா வில் மகஜர் கையளிப்பு:
  • மட்டக்களப்பில் தியாகி அன்னை பூபதிக்கு அஞ்சலி!
  • எமது விருப்பங்களுக்கு மாறாகவே நாம் ஆளப்படுகிறோம் – ஜெப்ரி பெல்ட்மனிடம் இரா.சம்பந்தன் தெரிவிப்பு:
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்