செய்திகள்
ரணிலின் ஆட்சி நீடித்தால் பிரபாகரனின் கோரிக்கைகள் நிறைவேறுமாம்: பிதற்றும் கமால் குணரத்ன!
ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஆட்சி தொடர்ந்து நாட்டில் ஏற்படுமாக இருந்தால் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கொள்கைகள் அனைத்தும் அரசியலமைப்பின் ஊடாக நிறைவேற்றப்படும்” என கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
மருதானையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவர் ( கமால் குணரத்ன) இறுதிப்போரின் போது மஹிந்த ஆட்சியில், கோட்டபாய ராஜபக்சவின் திட்டத்திற்கு ஏற்ப தமிழின அழிப்பை முன்னின்று நடாத்திய முக்கிய தளபதி என்பது குறிப்பிடத்தக்கது.
எந்த கொள்கைகளுக்காக யுத்த காலத்தில் 23 ஆயிரம் இராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்தார்களோ, அதனை 16 உறுப்பினர்களை கொண்ட கூட்டமைப்பு ஊடாக நிறைவேற்ற தமிழர்கள் தேசிய அரசாங்கத்தில் முயற்சித்தனர். அதில் பலவற்றை அவர்கள் சாதகமாக நிறைவேற்றியுமுள்ளனர்.
ரணில் ஊடாக ஆயுதம் ஏந்தாமலேயே பல விடயங்களை தமிழர்கள் சாதித்துவிட்டதாகவும், புலம்பெயர் விடுதலை புலிகளின் அமைப்புகளுக்காக மக்களின் ஆணையை மதிக்காமல் செயற்பட்டமையால் தான் ஐக்கிய தேசிய கட்சி பாரிய இன்னல்களுக்கு தற்போது முகம் கொடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆனால், தமிழினத்தையும், அவர்களின் உரிமை போராட்டத்தையும் கறையான் போல் அரித்து இன்று பாரிய பின்னடைவை தமிழர்கள் சந்திக்க அந்த ரணில் விக்கிரமசிங்க முக்கிய காரணமானவர் என்பதே நிதர்சனம்.