வருடல்

செய்திகள்

தமிழர்களின் பல தசாப்தகால போராட்டத்தின் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இந்து- கத்தோலிக்க வேறுபாடு ஏற்பட்டது கிடையாது: விக்கி

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தை காரணமாக வைத்து இந்து – கத்தோலிக்க முரண்பாடுகளை ஏற்படுத்தும் தீய சக்திகளின் செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம் என்று வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் மக்களின் உரிமைகளுக்கான பல தசாப்தகால போராட்டத்தின் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இந்து- கத்தோலிக்க வேறுபாடு ஏற்பட்டது கிடையாது என்றும் தமிழ் மக்களின் உரிமைகளுக்கான பல்வேறு வடிவங்களிலான போராட்டங்களில் கத்தோலிக்க மக்களும் கத்தோலிக்க மத குருமார்களும் மகத்தான பங்களிப்பை வழங்கியிருக்கின்றார்கள் என்றும் இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தை காரணமாக வைத்து அங்கு தமிழர் என்ற அடையாளத்துடன் அன்னியோன்யமாக வாழ்ந்துவரும் இந்துக்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் விதத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் விஷமத்தனமான செயற்பாடுகள் குறித்து மக்கள் விழிப்பாக இருந்துகொள்ள வேண்டும்.

இந்து – கத்தோலிக்க பதற்றத்தை தூண்டும் வகையில் சில தீய சக்திகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக நான் அறிகின்றேன். இதன் ஒரு அங்கமாக மன்னாரில் உள்ள கத்தோலிக்க குருமார்கள் மற்றும் மக்களை அச்சுறுத்தும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுவருவதாக அறிந்து நான் மிகவும் கவலை கொண்டுள்ளேன்.

தமிழ் மக்களின் உரிமைகளுக்கான பல தசாப்தகால போராட்டத்தின் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இந்து- கத்தோலிக்க வேறுபாடு ஏற்பட்டது கிடையாது. எமது உரிமைகளுக்கான பல்வேறு வடிவங்களிலான போராட்டங்களில் கத்தோலிக்க மக்களும் கத்தோலிக்க மத குருமார்களும் மகத்தான பங்களிப்பை வழங்கியிருக்கின்றார்கள். மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் எமது மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை சர்வதேச சமூகத்துக்கு கொண்டுசென்று நீதி மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாடுகளை ஏற்படுத்துவதற்கும் அளப்பரிய சேவையை கத்தோலிக்க மத குருமார்கள் செய்திருப்பது எம் எல்லோருக்கும் தெரியும்.

குறிப்பாக எனது மதிப்புக்குரிய மன்னார் மாவட்டத்தின் முன்னாள் பேராயர் இராயப்பு யோசப் அவர்கள் உயிர் ஆபத்துக்களையும் பொருட்படுத்தாமல் எமது அரசியல் உரிமைகளை வலியுறுத்தியும், மனித உரிமைகளை பாதுகாப்பதற்குமாக ஆற்றியுள்ள மகத்தான சேவையினை இந்த சந்தர்ப்பதில் நினைவு கூறுகின்றேன்.

அதேபோல, தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்குமான பணிகளில் ஈடுபட்டு 12 க்கும் அதிகமான பாதிரியார்கள் தமது உயிர்களை தியாகம் செய்திருக்கிறார்கள். பலர் காணாமல் போயிருக்கின்றார்கள். முள்ளிவாய்காலில் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டபோது கத்தோலிக்க மத குருமார்கள் மக்களின் பாதுகாவலர்களாக செயற்பட்டு தமது உயிர்களை இழந்திருக்கின்றார்கள்.

அதேபோல, தந்தை செல்வா எந்தவித மத வேறுபாடுகளும் இல்லாமல் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக இறுதிவரை அயராது உழைத்தார். அவரை தமது தலைவனாக ஏற்று தமிழ் மக்கள் பெரும் ஆதரவை வழங்கினார்கள். பின்னர் தம்பி பிரபாகரன் எமது உரிமைகளுக்காக போராடியபோது எந்தவித மத வேறுபாடுகளும் இன்றி ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அவர்பின்னே அணிதிரண்டு அளப்பெரும் தியாகங்களைச் செய்தார்கள்.

ஆகவே, எந்த ஒரு காரணத்தையும் முன்னிட்டு தமிழ் மக்கள் மத்தியில் இந்து- கத்தோலிக்க அடிப்படையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் தீய சக்திகளின் செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம் என்று தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். இத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும்.

எவரது தூண்டுதல்களுக்கும் ஆளாகி எந்த ஒரு முரண்பாட்டு நடவடிக்கைகளிலுந் தயவு செய்து ஈடுபடாதீர்கள். பொறுத்தார் பூமி ஆள்வார்கள். இது இந்துக்களுக்கும் பொருந்தும் கத்தோலிக்க மக்களுக்கும் பொருந்தும் என்பதை மறவாதீர்கள்

BBC TAMIL NEWS 25/01/2019

tgte-election-2019-london
tgte-election-2019-london
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
July 2019
M T W T F S S
« Apr    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • தேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்!
  • நாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:
  • முகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது !
  • இஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உ
  • யாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்