செய்திகள்
தமிழர் எதிர்காலம்…? பிரித்தானியாவில் முக்கிய, அவசர மக்கள் சந்திப்பு!
நாம் தமிழர் கட்சியின் பிரித்தானியக் கிழையினரின் மக்கள் சந்திப்பு ஒன்று இலண்டனில் நடைபெறவுள்ளது.
தேர்தலை அண்மித்துள்ள இந்தியாவின் களச்சூழலை மையமாக்கி தமிழகத்தின் எதிர்காலம் தொடர்பில் இச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
தமிழகத்தின் முது பெரும் கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க உட்பட பல பெரும் கட்சிகள் குளப்பமான சூழலுக்குள் தள்ளப்பட்டு பிளவுபட்டு நிற்கும் இவ் வேளையை எவ்வாறு தமிழர்கள் சாதகமாக்கி தமிழகத்தை தமிழர் ஆளும் நிலையை உருவாக்கலாம் என்பதே இக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாக உள்ளதாக தெரியவருகிறது.
ஆகவே நாம் தமிழராக ஒன்றிணைந்து எதிர்வரும் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் “நாம் தமிழர் கட்சியை” வெற்றிபெறச் செய்யவேண்டிய காலத்தின் கட்டாய நிலையை உணர்ந்து அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இச் சந்திப்புக்கள் பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் கீழ்க் காணும் மூன்று இடங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Southend Hall
Southend Road
Eastham E6 2AA
2:30PM @ SUNDAY 03/03/2019
36 Masons Avenue
Harrow HA3 5AR
Please note the change of address.
Date: Sunday 24/02/2019 @ 3:30pm
128 Aurelia Road
Croydon
CR0 3BF
3:30PM SUNDAY 10/03/2019
Tagged meeting, naamthamilar, tamils