வருடல்

செய்திகள்

நவீன நகரமாக மாறப்போகும் 300 ற்கும் மேற்பட்ட மனித புதைகுழிகளைக் கொண்ட செம்மணி!

1995 ஆம் ஆண்டு இறுதியில் யாழ் மண் சிறீலங்கா இராணுவ பிடிக்குள் வந்தபின்னர் கைதுசெய்யப்பட்டு பாலியல் வன்புணர்வு, சித்திரவதைகளின் பின்னர் உலகறியப்பட்ட “கிரிசாந்தி” உட்பட கொலை செய்யப்பட்ட 300 க்கும் அதிகமான தமிழர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட செம்மணி பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பாரிய நகரம் ஒன்று அமையவிருக்கிறது.

அதனை அமைப்பதற்கான யாழ்.மாநகரசபையின் யோசனையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கீகரித்துள்ளதுடன், அதற்கான நிதி மூலத்தை தேடுவதற்கும் இணக்கம் தெரிவித்திருக்கின்றார்.

குறித்த நவீன நகரத்திற்குள் குடியிருப்புக்கள், கலாச்சார வலயம், கல்வி வலயம், சுகாதார அல்லது மருத்துவ வலயம், விளையாட்டு வலயம், தொழில் ஸ்தாபனங்கள், கலப்பு அபிவிருத்தி வலயம், விடுதிகள், உணவகங்கள் என சகல வசதிகளும் உள்ளடக்கப்பட்டு, தரம்வாய்ந்த வடிகால்கள், வீதிகள் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்படும் என நவீன நகரம் தொடர்பான உத்தேச திட்டவரைபில் கூறப்பட்டிருக்கின்றது.

குறித்த திட்டம் சிறந்ததாக இருந்தாலும், அது அமையப் போகும் இடமே மனதை நெருடுவதாக இருக்கிறது. அத்தோடு எதிர்காலத்தில் போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்களை நிரந்தரமஅக மறைப்பதற்காகவா இலங்கை அரசு இதற்கான ஒப்புதலை உடன் வழங்கியுள்ளது என்ற சந்தேகமும் எழுகின்றது.

வடமாகாணத்திற்கு 3 நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்று காலை யாழ்ப்பாணம்
பிரதமர் சென்றிருந்தநிலையில் யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தி முன்னேற்றங்கள்
குறித்து ஆராய்வதற்கான கூட்டம் யாழ்.மாவட்ட செயலகத்தில்
இடம்பெற்றிருந்தது.

இதன்போது யாழ்.மாநகர முதல்வர் ஆனோல்ட் இந்த திட்டத்திற்கான மாதிரி வரைபை சமா்பித்திருந்ததுடன், பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கும் பிரதி ஒன்றை வழங்கியிருந்தார்.

இதன்போது கருத்து தொரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…

குறித்த நவீன நகர திட்டம் சிறந்த திட்டம். இத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதியை பெறுவதற்கான நிதி மூலங்களை தேடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அந்த கூட்டத்திலேயே இணக்கம் தொரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாநகர முதல்வர் இ.ஆனோல்ட், யா ழ்ப்பாணம்- செம்மணி பகுதியில் சகல வசதிகளுடனும் கூடிய நவீன நகரம் ஒன்றை சுமார் 293 ஏக்கர் நிலபரப்பில் அமைப்பதற்கான திட்டம் ஒன்றை தீட்டியிருக்கிறோம். இதற்கு தேவையான 293 ஏக்கர் நிலப்பகுதி வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் ஆளுகைக்குள் இருந்தது.

இந்நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ்.மாவட்ட செயலர் என்.வேதநாயகன் ஆகியோருடன் நானும் பிரதமரை சந்தித்து திட்டம் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியிருந்தோம்.

அதற்கமைய 2 வாரங்களிலேயே வனவள பாதுகாப்பு திணைக்களம் எமக்கு தேவையான 293 ஏக்கர் நிலத்தை தமது ஆழுகைக்குள் இருந்து விடுவித்து கொடுப்பதற்கு இணக்கம் தெரிவித்தது.

பின்னர், கொழும்பிலிருந்து நிபுணர்களை அழைத்துவந்து அந்த காணிகளை அளவீடு செய்துள்ளதுடன் நவீன நகருக்கான மாதிரி ஒன்றையும் தயார் செய்துள்ளோம்.

அதனை இன்று பிரதமர் தலமையில் நடைபெற்ற கூட்டத்தில் சமர்பித்தபோது அதனை வரவேற்ற பிரதமர் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த தேவையான நிதி மூலத்தை தேடுவதற்கு இணக்கம் தொிவித்துள்ளார் என கூறினார்.

BBC TAMIL NEWS 25/01/2019

tgte-election-2019-london
tgte-election-2019-london
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
January 2020
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • தேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்!
  • நாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:
  • முகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது !
  • இஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உ
  • யாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்