வருடல்

செய்திகள்

பிரதமர் பேசும் போது மெளனியாக இருந்தது ஏன்…! சிறீதரனின் புது விளக்கம்:

பிரதமர் தலைமையில் கூட்டம் நடைபெற்ற போது, அவரின் உரைக்கு குறுக்காக அநாகரீகமாக பேச முடியாத சூழல் இருந்ததாகவும், அதனாலேயே தான் சபை நாகரிகம் கருதி தான் எதுவும் பேசவில்லை என்று த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தால் எந்த மக்கள் படுகொலை செய்யப்பட்டார்களோ, அந்த மக்களின் மண்ணில் நின்று கொண்டே பிரதமர் அங்கு உரையாற்றும் போது, போர்க்குற்ற விசாரணைகள் வேண்டாம். மறப்போம், மன்னிப்போம் என்ற வார்த்தைகளோடு, எல்லாவற்றையும் மூடி விடுகின்ற தந்திரோபாய செயற்பாட்டை மேற்கொண்டபோது மெளனிகளாக இருந்த கூட்டமைப்பினர் மீது மக்கள் கடும் அதிர்ப்தி வெளீயிட்டு வருவதை தொடர்ந்தே அதிலிருந்து தப்பிக்க த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இறுதி யுத்தத்தில் 1 இலட்சத்து 46 ஆயிரம் பேர் காணாமல் போயும், படுகொலை செய்யப்பட்டும் உள்ளனர். பல குழந்தைகள் பட்டினியால் கொல்லப்பட்டுள்ளனர்.

4 இலட்சத்துக்கு அதிகமான மக்கள் முள்ளிவாய்க்கால் வரை சென்ற போது, 75 ஆயிரம் பேர் தான் மாத்திரமே இருந்தார்கள்.

பொருளாதார தடைகளை விதித்து, உணவுகளை அனுப்பாது, பட்டினி போட்டு, இதே இலங்கை அரசாங்கம் கொலை செய்த போது, கருத்துக்களை வெளியிடாத பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து, இன்னும் உங்களை அழிப்போம் என்கிற எண்ணக் கருவுடன் உள்ளது.

மிக முக்கியமாக தமிழர்கள் மீது இனப்படுகொலை செய்யப்பட்டது. அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அதற்கு என்ன தீர்வு அதை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி தமிழர்கள் தான் முடிவை எடுக்க வேண்டும்.

மறப்போம் மன்னிப்போம் என தாமே கொலையையும் செய்துவிட்டு குற்றங்களையும் புரிந்துவிட்டு, படுகொலைகளையும் செய்துவிட்டு, தாமே தீர்ப்புச் சொல்லும் நிலையை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது” என அவர் மேலும் தெரிவித்தார்.

Tagged , , , ,

BBC TAMIL NEWS 25/01/2019

வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
March 2019
M T W T F S S
« Feb    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • வீட்டுத்திட்ட நிதி வழங்கப்படாததை கண்டித்து மக்கள் போராட்டம்:
  • இராணுவத்தின் போர்க்குற்ற ஆதாரங்கள் என்னிடம்: சரத் பொன்சேகா
  • 6 தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஐ.நா வில் மகஜர் கையளிப்பு:
  • மட்டக்களப்பில் தியாகி அன்னை பூபதிக்கு அஞ்சலி!
  • எமது விருப்பங்களுக்கு மாறாகவே நாம் ஆளப்படுகிறோம் – ஜெப்ரி பெல்ட்மனிடம் இரா.சம்பந்தன் தெரிவிப்பு:
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்