வருடல்

செய்திகள்

புதிய பிரேரணையை நீர்த்துப் போக வைக்க இடமளிக்கக் கூடாது: பிரித்தானியாவிடம் கூட்டமைப்பு கோரிக்கை

இலங்கை தொடர்பாக 2015இல் ஜெனிவாவில் நிறைவேற்றிய தீர்மானத்தில் கூறப்பட்ட விடயங்களை இலங்கை நிறைவேற்றுவதற்குத் திட்டவட்டமான காலவரையறைகளை விதிக்க வேண்டும் எனவும், புதிய பிரேரணையை இலங்கை நீர்த்துப் போக வைக்க இடமளிக்கக் கூடாது எனவும் தாம் வலியுறுத்தியுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா.மனித உரிமைகள் சபையின் தற்போதைய கூட்டத் தொடரில் இலங்கை மீதான சர்வதேசக் கண்காணிப்பை இடைவிடாது தொடர்வதற்கு வழி செய்யும் விதத்தில் இலங்கை தொடர்பாகப் புதிய பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவதற்கு பிரிட்டன் எடுத்த முயற்சிகளுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் நேரடியாக இலண்டனில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரியைச் சந்தித்து கூட்டமைப்பின் நன்றியைத் தெரிவித்தார்.

கூட்டமைப்பின் இலண்டன் பிரிவுத் தலைவர் ஆர்.டி.இரத்தினசிங்கம், வண.பிதா எஸ்.ஜே.இம்மானுவேல் ஆகியோருடன் சென்ற சுமந்திரன் எம்.பி. அங்கு பிரிட்டனின் தெற்காசியப் பிரிவுத் திணைக்களத்தின் தலைமை அதிகாரியான பேர்குஸ் ஒல்டை கடந்த வெள்ளியன்று சந்தித்தார்.

அச்சமயமே மேற்படி புதிய பிரேரணையைக் கொண்டு வந்தமைக்காகக் கூட்டமைப்பின் நன்றியைப் பிரிட்டனுக்குத் தெரியப்படுதினார்.

ஏற்கனவே இலங்கை தொடர்பாக 2015இல் இலங்கையும் சேர்ந்து ஜெனிவாவில் நிறைவேற்றிய தீர்மானத்தில் கூறப்பட்ட விடயங்களை இலங்கை நிறைவேற்றுவதற்குத் திட்டவட்டமான காலவரையறைகளை விதிக்க வேண்டும் எனவும், புதிய பிரேரணையை இலங்கை நீர்த்துப் போக வைக்க இடமளிக்கக் கூடாது எனவும் இந்த மூவர் குழு பிரிட்டன் தரப்பை வலியுறுத்தியது எனவும் அறியவந்தது.

BBC TAMIL NEWS 25/01/2019

tgte-election-2019-london
tgte-election-2019-london
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
June 2019
M T W T F S S
« Apr    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • தேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்!
  • நாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:
  • முகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது !
  • இஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உ
  • யாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்