வருடல்

செய்திகள்

போரின் தாக்கத்திலிருந்து மீளமுடியாத நிலையில் தமிழினம்: ஆளுனர் ராகவன்

வரலாறு எமக்கு கொடுத்த சில கட்டளைகளினாலே ஏற்பட்ட போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம் என்று வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார். 

சகோதரத்துவத்தின் காலடிகள் அமைப்பினால் யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் நேற்று ஏற்பாடுசெய்யப்பட்ட நெகிழ்வுத்தன்மையுடைய செயற்கைக் கால்கள் வழங்கும்  நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

சுமார் 1.5 மில்லியன் ரூபா நிதியில் உருவாக்கப்பட்ட இந்த கால்கள் கிருபா லேணர்ஸ் மற்றும் சகோதரத்துவத்தின் காலடிகள் நிதியம், சரஸ்வதி மண்டபம், நன்கொடையாளர் செ. ஸ்ரீஸகந்தவேல் ஆகியோரின் அனுசரணையில் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் அவர் மேலும் உரையாற்றுகையில்,

நாங்கள் ஒரு விதத்தில் மகிழ்ச்சியடைந்தாலும் இன்னொருவிதத்தில் மகிழ்ச்சியடைய முடியாத ஒரு நிகழ்வாக இது இருப்பது எங்களுக்கு புரிகின்றது. போர் முடிந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்ட போதும், போரில் ஏற்பட்ட அனேக வேதனைகள் சித்தமாக நாங்கள் இன்று எங்கள்  குடும்பத்தை சேர்ந்தவர்கள், எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள், எங்கள் மொழியை சேர்ந்தவர்கள், எங்கள் கலாச்சாரத்தை சேர்ந்த சிலரை இந்த நிலையில் பார்ப்பதற்கும் அவர்களின் வாழ்க்கை கதையை கேட்பதற்கும் கட்டாயப்பட்டுள்ளோம். 

ஆகையினாலே இந்த நிகழ்ச்சி என்னை பொறுத்தவரையில் சந்தோசம் கொடுக்கும் நிகழ்ச்சியாக அல்ல. ஆனால் நம்பிக்கை கொடுக்கும் ஒரு நிகழ்வாக இருக்கும்.

ஏனெனில் நீங்கள் திரும்பவும் வாழ்க்கையை பெறவேண்டும். அந்தளவுக்கு தைரியமாக ஒரு காரியத்தை குறித்து உங்களை அர்ப்பணித்து இருந்த காலம் இருக்கிறது. அந்த காலத்தை போலவே திரும்பவும் வாழ்க்கையை சீர்செய்து கொள்வதற்கான நம்பிக்கைவரவேண்டும். அந்த நம்பிக்கையை கொடுக்கும் நிகழ்வாக நான் இதனை கருதுகின்றேன் என்று கௌரவ ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

ஒரு சமுதாயத்தின் நாகரீகமென்பது அந்த சமுதாயத்தில் இருக்கின்ற வலுவற்றவர்களை அது எந்தளவிற்கு தாங்கிக்கொள்கின்றது, எந்தளவிற்கு அது உள்வாங்கிக் கொள்கின்றது என்ற விடயமாகும். இன்று உங்களுக்கு கொடுக்கப்பட்டது வெறுமனே ஒரு செயற்கையான பாதணிமட்டுமல்ல ஒரு புதிய வாழ்க்கையின் அத்தியாயம் என்று நீங்கள் எண்ணவேண்டும்.. 

நான் ஆளுநராக வரவேண்டும் என்று கனவுகாணவுமில்லை சண்டைபோடவுமில்லை. நான் தற்செயலாக ஆளுநராக மாறினேன் என்று தான் சொல்லவேண்டும். ஆனால் நான் ஆளுநராக இருக்கும் காலம் எவ்வளவோ அதுவரை சமுதாயத்தின் விளிம்பிலே உள்ள மக்களுக்காக சேவைபுரிய நான் என்னை அர்ப்பணித்திருக்கின்றேன் என்றும் ஆளுநர் மேலும் குறிப்பிட்டார். 

Tagged , , , ,

BBC TAMIL NEWS 25/01/2019

tgte-election-2019-london
tgte-election-2019-london
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
September 2019
M T W T F S S
« Apr    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • தேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்!
  • நாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:
  • முகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது !
  • இஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உ
  • யாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்