வருடல்

செய்திகள்

வடக்கு அபிவிருத்திக்கு என் 2000 மில்லியன் ரூபா அமைச்சரவையால் அங்கீகாரம்!

வடக்கில் துரித அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக 2000 மில்லியன் ரூபா ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஆனால் இதனை புதிதாக வந்துள்ள வடமாகாண ஆளுனர் சரியாக பயன்படுத்த்தி வழக்கை சரியாக அபிவிருத்தி செய்வாரா என பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

ஜனாதிபதியின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடக்கு அபிவிருத்தி தொடர்பில் மேற்படி யோசனையை முன்வைத்தார்.

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அபிவிருத்தி கைவிடப்பட்டிருந்ததினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதார அடிப்படை வசதி மற்றும் சமூக அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் வாழ்வாதார நிவாரணத்தை வழங்கி அந்த பிரதேச அபிவிருத்தியை துரிதப்படுத்தும் பொருட்டு விசேட திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக விவசாயம், கைத்தொழில், கடற்றொழில் மற்றும் சேவைத் துறைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி இவற்றின் கீழான வேலைத்திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படும்.

கிராமப் புற வீதிகள் தீவுகளில் வள்ளங்களுக்கான நங்கூரமிடும் இடங்கள் மற்றும் தரைப்பகுதிகளில் ஜெட் தீவுகள் மற்றும் பிரதான தரைநிலங்களுக்கிடையில் பிரவேசத்திற்கான வசதிகளை வழங்குதல், விவசாய உபகரணங்கள் விவசாயக் கிணறுகள் மீன்பிடி வள்ளங்கள் மற்றும் என்ஜின்கள், சுயதொழில் வாய்ப்புடன் தொடர்புபட்ட உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பம் சந்தை வசதிகள், களஞ்சியம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட அடிப்படை வசதிகள் போன்ற வாழ்வாதார மற்றும் தொடர்புபட்ட ஏனைய வசதிகள் இந்த திட்டத்தின் மூலம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது.

இதற்கமைவாக பொருளாதார அடிப்படை வசதி, சமூக அடிப்படை வசதி, ஜீவனோபாயம் மற்றும் சுயதொழில் வாய்ப்பு மற்றும் சிறிய கைத்தொழில்கள் மற்றும் தொழில் முயற்சி போன்ற 4 துறைகள் ஊடாக இந்த திட்டம் விரைவாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதற்காக 2000 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக தேசியக் கொள்கை பொருளாதார அலுவல்கள், மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி தொழில் பயிற்சி திறனாற்றல் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அபிவிருத்தி அமைச்சரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

BBC TAMIL NEWS 25/01/2019

tgte-election-2019-london
tgte-election-2019-london
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
August 2019
M T W T F S S
« Apr    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • தேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்!
  • நாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:
  • முகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது !
  • இஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உ
  • யாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்