வருடல்

செய்திகள்

விக்னேஸ்வரனின் மனுவை நிராகரித்தது நீதிமன்று:

முன்னாள் வடமாகாண முதலமைச்சரான சி.வி.விக்னேஸ்வரனின் மனுவை இன்று நீதிமன்று நிராகரித்துள்ளது.

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தமக்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை விசாரனை செய்யும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு இல்லை என்று, சி.வி.விக்னேஸ்வரன் தாக்கல் செய்த அடிப்படை ஆட்சேபனை மனுவினையே மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இந்த மனு மீதான வழக்கு இன்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது நீதிபதிகளான குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் இந்த தீர்ப்பினை அறிவித்தனர்.

இந்த தீர்ப்பின்படி விக்னேஸ்வரனுக்கு எதிரான விசாரணை தொடர்ந்து நீதிமன்றத்தில் நடைபெறும். வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், முன்னாள் முதலமைச்சரால் வடக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டு, புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து முன்னாள் முதலமைச்சரின் தீர்மானத்தை இரத்துச் செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி வட. மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் டெனிஸ்வரன் மேன்முறையீடு செய்திருந்தார். அதன்படி டெனிஸ்வரனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்துக்கு தடை உத்தரவு பிறப்பித்து மீண்டும் அவருக்கு அந்தப் பதவியை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்றத்தின் அந்த உத்தரவை செயற்படுத்தாமை காரணமாக முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி, டெனிஸ்வரன் மீண்டும் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

BBC TAMIL NEWS 25/01/2019

வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
February 2019
M T W T F S S
« Jan    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • ஆலயப் பணியின் போது மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் பலி!
  • ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப் பயணம்!
  • பிரதமர் பேசும் போது மெளனியாக இருந்தது ஏன்…! சிறீதரனின் புது விளக்கம்:
  • மாகாணசபை தேர்தலை நடத்துமாறு உச்ச நீதிமன்றில் மனு:
  • கொக்குவிலில் பெற்றோல் குண்டு வீச்சுத் தாக்குதல்!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்