செய்திகள்
விடுதலையானார் ஞானசாரதேரர் – தமிழ் கைதிகளோ தொடர்ந்தும் சிறையில்!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் கடூழியச் சிறைத்தண்டனை யிலிருந்து நேற்று நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அருக்கு விதிக்கப்பட்டிருந்த 6 மாதங்கள் கடூழியச் சிறைத் தண்டனை 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டதனால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் பல ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்துவரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் கைதிகளை விடுதலை செய்யாது இன, மத வெறிபிடித்த ஞானசாரதேரரை விடுவித்துள்ளமையானது தமிழர்களுக்கு இலங்கைத் தீவில் எப்போதுமே நீதி கிடைக்காது என்பதை வலியுறுத்திக் காட்டியுள்ளதோடு ஆளும் வர்க்கம் சிங்கள பெளத்த பேரினவாதிகளாகவே உள்ளனர் என்பதை கோடிட்டு காட்டி நிற்கிறது.
நீதிமன்றை அவமதித்த குற்றத்துக்காக, ஹோமாகம நீதிவான் மன்று ஞானசார தேரருக்குக் கடந்த வருடம் விதித்த தண்டனையை நீக்குமாறுகோரி ஹோமாகம மேல் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மனுமீதான தீர்ப்பை அறிவித்த மேல்நீதிமன்ற நீதிபதி அமல் திலகரத்ன, ஞானசார தேரருக்கு விதித்த சிறைத் தண்டனையை 5 வருடங்களுக்கு ஒத்திவைப்பதாகத் தெரிவித்ததற்கு அமைவாக அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.